வளர்ப்பு நாய்கள் வைத்திருப்போருக்கு... சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை!
‘வாட்ஸ்அப்’ மூலம் 50 சேவைகள்; மெட்டா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த தமிழக அரசு!
அரசின் 50க்கும் மேற்பட்ட சேவைகளை வாட்ஸ்அப் மூலம் மக்கள் எளிதாக பெறுவதற்கு தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, மெட்டா நிறுவனத்துடன் தகவல் தொழில்நுட்பத் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

குடும்ப அட்டை (ரேஷன் கார்ட்) சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள், பிறப்பு, வருமானச் சான்றிதழ்கள், வரி செலுத்துதல், வணிக உரிமங்கள், அரசுப் பேருந்து சீட்டுக்கான முன்பதிவு போன்ற பல சேவைகளை ‘வாட்ஸ்அப்’ வழி மக்கள் பெற முடியும்.
அச்சேவைகளை வழங்குவதற்காகத் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் செயல்படும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ‘சாட்பாட்’ அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இந்த வாட்ஸ்அப் அடிப்படையிலான சேவையை அடுத்த மூன்று மாதங்களில் தொடங்கவுள்ளது.
சேவையை பெற பல்வேறு அலுவலகங்களுக்கும் மக்கள் அலைவதை இத்திட்டம் தடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், மக்கள் தங்கள் கைபேசி வாயிலாகவே அரசு சேவைகளைப் பெற முடியும். இது நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அரசின் சேவைகளை மக்களுக்கு எளிதாகக் கொண்டு சேர்க்கும் ஒரு முக்கியப் படியாகக் கருதப்படுகிறது.