செய்திகள் :

உ.பி.யில் ஜலாலாபாத் ஊரின் பெயரை பரசுராம்புரி என மாற்றிய மத்திய அரசு!

post image

உத்தரப் பிரதேசத்திலுள்ள ஜலாலாபாத் என்ற ஊரின் பெயர் பரசுராம்புரி என இன்று (ஆக. 20) பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெயரை மாற்ற வலியுறுத்தி, மத்திய உள் துறை அமைச்சகத்துக்கு உத்தரப் பிரதேச மாநில தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தக் கடிதத்தில், ஜலாலாபாத்தின் பெயரை பரசுராம்புரி என மாற்றுவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

மேலும், தற்போதுள்ள ஜலாலாபாத் பகுதியானது தெய்வீக துறவி பரசுராம் பிறப்பிடமாகக் கருதப்படுவதாகவும், அங்கு பரசுராமுக்கு கோயில் இருப்பதாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், ஊரின் பெயரை மாற்றக் கோரி ஜலாலாபாத் நகராட்சி நிர்வாகமும் முன்மொழிந்துள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என உள் துறை அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜலாலாபாத் என்ற ஊரின் பெயர் பரசுராம்புரி என மாற்றப்பட்டுள்ளது.

ஜலாலாபாத் நகராட்சியை உள்ளடக்கிய ஷாஜஹான்பூர் தொகுதி எம்.பி., ஜிதின் பிரசாடா, ''ஜலாலாபாத் ஊரின் பெயரை பரசுராம்புரி என மாற்ற ஒப்புதல் அளித்த மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நன்றி'' தெரிவித்துக்கொள்வதாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க |பின்னோக்கிச் செல்கிறது இந்தியா: ராகுல் விமர்சனம்

Jalalabad town in Uttar Pradesh's Shahjahanpur district renamed as ‘Parashurampuri’

ஆந்திரத்தில் குளத்தில் மூழ்கி 6 குழந்தைகள் பலி!

ஆந்திரப் பிரதேசத்தின் கர்ணூல் மாவட்டத்தில், குளத்தில் மூழ்கி ஒரு சிறுமி மற்றும் 5 சிறுவர்கள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்ணூல் மாவட்டத்தின், சிகேலி கிராமத்தில் 5-ம் வகுப்பு படித்து வந்த 10 மு... மேலும் பார்க்க

அமெரிக்காவின் வரிவிதிப்பு! இந்தியாவுக்கு ரூ.4.19 லட்சம் கோடி பாதிப்பு!

அமெரிக்காவின் வரிவிதிப்பால், இந்தியாவில் 48 பில்லியன் டாலர் மதிப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.பரஸ்பர வரி மற்றும் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாகக் கூறி, இந்தியா மீது 50 சதவி... மேலும் பார்க்க

சத்தீஸ்கர்: ரூ.30 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 8 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தில், கூட்டாக ரூ.30 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த 8 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். நாராயணப்பூர் மாவட்டத்தில், தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்... மேலும் பார்க்க

பின்னோக்கிச் செல்கிறது இந்தியா: ராகுல் விமர்சனம்

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாக்கள், இந்தியா பின்நோக்கிச் சென்றுகொண்டிருப்பதைக் குறிப்பதாக காங்கிரஸ் மக்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அமைச்சர்கள், முதல்வர்க... மேலும் பார்க்க

இந்திய கால்பந்து அணிக்குத் தேர்வான ராணுவ வீரர்..!

இந்திய கால்பந்து அணியில் இந்திய ராணுவ வீரர் சுனில் பெஞ்சமின் தேர்வாகியுள்ளார். இந்திய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளர் காலித் ஜமில் தைரியமான முடிவுகளை எடுப்பவராக இருப்பதாக பலரும் பாராட்டு தெரிவித்... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு! பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!

காஷ்மீரில் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை வன்முறைகள் தண்டனையாக பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறிய பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.போர் சூழலுக்கு மத்தியில் பாலியல் வன்முறை... மேலும் பார்க்க