வளர்ப்பு நாய்கள் வைத்திருப்போருக்கு... சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை!
பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு! பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!
காஷ்மீரில் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை வன்முறைகள் தண்டனையாக பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறிய பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
போர் சூழலுக்கு மத்தியில் பாலியல் வன்முறைகளுக்கு ஆளானவர்களுக்கான உயிர்காக்கும் சேவைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் திட்டங்கள் குறித்து ஐநா அவையில் விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தின்போது பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி, காஷ்மீரில் உள்ள சமூகங்களை தண்டிப்பதற்கும், அவர்களை அவமானப்படுத்துவதற்கும் அவர்கள் மீதான பாலியல் வன்முறை நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக இந்தியா மீது குற்றம் சாட்டியது.
பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதிலளிக்கையில், 1971 ஆம் ஆண்டில் கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய வங்கதேசம்) பெண்களுக்கு எதிராக கடுமையான பாலியல் வன்முறை போன்ற கொடூரமான குற்றங்களை அந்நாட்டு ராணுவம் செய்திருப்பது வெட்கக்கேடான வரலாறு.
பாகிஸ்தானில் சிறுபான்மை சமூகங்களில் பெண்கள், சிறுமிகள் இன்றளவிலும் கடத்தல், கட்டாயத் திருமணம், மத மாற்றத்தை எதிர்கொள்கின்றனர். பெண்களுக்கு எதிரான இந்தக் குற்றங்கள், அந்நாட்டின் நீதித்துறையும் உறுதிப்படுத்துகிறது. ஆனால், இந்தக் குற்றங்களில் ஈடுபவர்கள்தான், தற்போது நீதிமான்களாகவும் மாறுவேடமிட்டிருப்பது முரண்பாடாக இருக்கிறது.
2024 அறிக்கையின்படி, கடந்தாண்டு பாகிஸ்தானில் 24,000-க்கும் மேற்பட்ட கடத்தல்கள், 5,000 பாலியல் வன்கொடுமை வழக்குகள், 500 ஆணவக் கொலைகளும் பதிவாகியுள்ளன. சிந்து பகுதியில் பாதிக்கப்பட்ட ஹிந்து சிறுமிகள் பலரும் திருமணம் மற்றும் மத மாற்றத்துக்கு கட்டாயப்படுத்தப்பட்டனர். இருப்பினும், தண்டனை விகிதம் 2 சதவிகிதத்துக்கும் குறைவானதாகவே இருக்கிறது என்று தெரிவித்தார்.