‘வாட்ஸ்அப்’ மூலம் 50 சேவைகள்; மெட்டா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த தமிழக அரசு!
போலந்தில் யூஎஃப்ஓ விபத்து? வானில் பறந்து வந்து கீழே விழுந்து வெடித்த மர்ம பொருள்!
போலந்து நாட்டின் கிழக்கு மாகாணத்தில், வானில் பறந்து வந்த மர்ம பொருள் திடீரென கிழே விழுந்து வெடித்ததால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியுள்ளது.
போலந்தின், ஒசினி கிராமத்தில் இன்று (ஆக.20) அதிகாலை 2 மணியளவில் வானில் பறந்து வந்த மர்ம பொருள் ஒன்று, திடீரென தரையில் விழுந்து வெடித்துச் சிதறியுள்ளது. இதனால், அப்பகுதியில் அமைந்திருந்த சில வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் தீயில் கருகிய சில மெட்டல் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் அங்கிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
❓️
— NoHoldsBarred (@AussieSteve64) August 20, 2025
An object fell & exploded in a cornfield in eastern Poland.
The Operational Command of the Polish Armed Forces said that after conducting preliminary analyses of radar system records, no violation of Polish airspace was recorded last night from either Ukraine or Belarus. pic.twitter.com/lr2Rt7jYVB
இந்நிலையில், இதுகுறித்த விடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், விபத்துக்குள்ளானது யூஎஃப்ஓ என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், அப்பகுதியில் விழுந்து வெடித்துச் சிதறிய மர்ம பொருளானது ட்ரோனாக இருக்கக் கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும், அருகிலுள்ள உக்ரைன் மற்றும் பெலாரஸ் நாடுகளின் ட்ரோன்கள் போலந்தின் வான்வழியில் அத்துமீறி நுழையவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தச் சம்பவத்தில் வெடித்துச் சிதறியது ராணுவ ட்ரோனா? அல்லது கடத்தல்காரர்கள் பயன்படுத்திய ட்ரோனா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக போலந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: மேற்கு கரையை இரண்டாகப் பிரிக்கக் கூடிய திட்டம்! இஸ்ரேல் அரசு ஒப்புதல்!