அமெரிக்கா: 33 ஆண்டுகளில் 24 மில்லியன் மைல்; விமான பயணத்தில் சாதனை; யார் இந்த பயண...
"முதலமைச்சர்கள் பதவியை பறிக்கும் மசோதா" - அமித் ஷாவின் மசோதாவுக்கு CPI (M) கண்டனம்!
மத்திய உள்துறை அமைச்சர் இன்று தாக்கல் செய்துள்ள 130வது அரசமைப்பு திருத்த மசோதாவின் படி, 5 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை கிடைக்கும் படியான கடுமையான குற்றச்சாட்டுகளில் கைதாகி, 30 நாட்களுக்கும் மேல் பிணையில் வராமல் காவலில் இருந்தால் பிரதமர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் பதவியை நீக்க முடியும். கைதாகும் தலைவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாவிட்டாலும் அவரது பதவி பறிபோகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மசோதாக்கள் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன.




அந்த வகையில் அமித் ஷா அறிமுகப்படுத்திய மசோதாவுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
CPI (M) அறிக்கை
ஜனநாயக விரோத மசோதாக்களுக்கு சி.பி.ஐ (எம்) கண்டனம் தெரிவிக்கிறது என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்சிஸ்ட்) அரசியல் குழு 30 நாட்கள் காவலில் இருந்தால் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்களின் பதவியை பறிக்கும் வகையிலான மோதாவை கண்டிக்கிறது. இது மோடி அரசாங்கத்தின் நிறுவப்பட்ட சட்ட நடைமுறைகளை மீறிச் செயல்படும் ஜனநாயக விரோத போக்கை காட்டுகிறது.
கொடூரமான குற்றங்கள் எனத் தனிமைப்படுத்தி, நீதித்துறை விசாரணை தவிர்த்து செயல்படுவதற்கான ஒருமுழுமையான சட்டத்தை உருவாக்க கடந்த காலங்களிலும் பாஜக முயன்றுள்ளது.

தற்போதைய அரசின் நவ-பாசிச போக்குகளைக் காணும்போது, இது எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகளை குறிவைப்பதற்கான ஆயுதமாக பயன்படுத்தப்படும் என்பதை கண்கூடாக அறியமுடிகிறது.
இது அருவருப்பானது மட்டுமல்லாமல் ஜனநாயகத்துக்கான அடிப்படை காரணிகள் மற்றும் சமநிலையை குறைமதிப்புக்கு உட்படுத்துவத்துவதாகும். இதில் குற்றத்தைக் குறிப்பிடுவது அரசின் உண்மையான நோக்கத்தை மறைப்பதற்கான திரை மட்டுமே.
இந்த சட்டத்தை எதிர்த்து முழு பலத்துடன் போராட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதிபூண்டுள்ளது. மேலும் எதிர்க் கட்சிகளாக இருக்கும் அனைத்து ஒத்த கருத்துடைய ஜனநாயக மற்றும் மத சார்பற்றக் கட்சிகளும் இந்த தேவையற்ற நடவடிக்கையை கூட்டாக எதிர்க்க வேண்டும் என வலுயுறுத்துகிறது." எனக் கூறப்பட்டுள்ளது.