செய்திகள் :

முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு! சசி தரூர் ஆதரவு?

post image

அமைச்சர்கள், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள், முதல்வர்கள் பதவிப்பறிப்பு குறித்த மசோதாவை காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, கொடூரமான மசோதா என்று விமர்சித்த நிலையில், மசோதாவுக்கு காங்கிரஸின் மற்றொரு எம்.பி. சசி தரூர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறுகையில், நீங்கள் 30 நாள்கள் சிறையில் வைக்கப்பட்டால், அமைச்சராக தொடர முடியுமா? இது பொதுஅறிவு சார்ந்த ஒன்று. இதில் தவறாக எதுவும் தெரியவில்லை.

இந்த மசோதாவை ஆய்வுக்கு அனுப்புவது நல்ல விஷயம்தான். குழுவுக்குள் விவாதம் நடத்துவதுதான் ஜனநாயகத்துக்கு நல்லது என்று நினைக்கிறேன். ஆகையால், விவாதத்தை நடத்துவோம் என்று தெரிவித்தார்.

மக்களவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 3 மசோதாக்களை முன்மொழிந்தார். அவற்றில் முதல்வர்கள், அமைச்சர்கள் அல்லது பிரதமரோ 30 நாள்களுக்கு காவலில் வைக்கப்பட்டால், 31 ஆவது நாளில் அவர்கள் பதவிநீக்கம் செய்யப்படுவர் என்ற மசோதாவும் அடங்கும்.

ஆனால், இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அமளியில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி, மசோதாவின் நகல்களைக் கிழித்து, அவற்றை அமித் ஷாவின் முகத்துக்கு முன்பாக தூக்கியெறிந்தனர். இருப்பினும், இந்தப் பதவிப்பறிப்பு மசோதாவை ஒரு கூட்டுக் குழுவுக்கு அனுப்பி ஆய்வு செய்யப்படும் என்றும் அமித் ஷா கூறினார்.

இந்த நிலையில்தான், பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சசி தரூர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், அவ்வப்போது கட்சி மற்றும் கட்சியினரின் நிலைப்பாட்டுக்கு மாறாக கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவரிடம் `பாஜகவில் இணையப் போகிறீர்களா?’ என்ற கேள்வி எழுப்பப்பட்ட போதிலும், அதனை அவர் முற்றிலுமாக மறுத்தார்.

இதையும் படிக்க:அமைச்சர்கள், முதல்வர்கள் பதவிப்பறிப்பு! அமித் ஷா மீது தூக்கியெறியப்பட்ட மசோதா நகல்கள்!

Shashi Tharoor Differs With Congress Again On 'Bill To Remove PM, Chief Ministers'

சத்தீஸ்கரில் ஒரே நாளில் 21 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கரில், கூட்டாக ரூ.25.5 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட 13 பேர் உள்பட 21 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். தண்டேவாடா மாவட்டத்தில், கூட்டாக ரூ.25.5 லட்சம் வெகுமதி அறிவித்து ... மேலும் பார்க்க

ஒருதலைக் காதல்! ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற மாணவர்!

மத்திய பிரதேசத்தில் ஆசிரியர் மீது எரிக்க முயன்ற மாணவர் கைது செய்யப்பட்டார்.மத்திய பிரதேசம் மாநிலம், நரசிங்கபுரம் மாவட்டத்தில் சூர்யான்ஷ் கோச்சார் (18) என்ற மாணவர், தனது பள்ளியில் பணியாற்றிய 26 வயதுடைய... மேலும் பார்க்க

மசோதாவை நிறுத்திவைத்தால் ஆளுநரின் விருப்பப்படி அரசு எப்படி இருக்கும்? - உச்சநீதிமன்றம்

ஆளுநர் தனது விருப்பப்படி மசோதாவை நிறுத்திவைத்தால் அரசு எப்படி ஆளுநரின் விருப்பப்படி செயல்படும்? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மாநில அரசுகள் அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசு... மேலும் பார்க்க

அமளிக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா!

எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதிக்கும் மசோதா மக்களவையில் இன்று(ஆக. 20) தாக்கல் செய்யப்பட்டது.பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க... மேலும் பார்க்க

கேரள நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள துணை நீதிமன்றத்துக்கு, இன்று (ஆக.20) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளத்தின், வடக்கு பராவூர் பகுதியில் அமைந்துள்ள துணை நீதிமன... மேலும் பார்க்க

குவஹாட்டி உயர்நீதிமன்றத்துக்கு 2 நிரந்தர நீதிபதிகள்: கொலிஜியம் ஒப்புதல்!

குவஹாட்டி உயர்நீதிமன்றத்தில் இரண்டு கூடுதல் நீதிபதிகளை நிரந்திர நீதிபதிகளாக நியமிக்கும் திட்டத்திற்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியத் தலைமை நீதிபதி பி,ஆர். கவாய் தலைமையிலான கொல... மேலும் பார்க்க