130th Amendment: ``நாம் மன்னர் காலத்துக்குச் சென்றுவிட்டோம்" - நாடாளுமன்றத்தில் ...
புதிய மாடலை அறிமுகப்படுத்தியது மெர்சிடஸ் பென்ஸ்: விலை ரூ.1.35 கோடி
வாகன உற்பத்தில் முன்னிலை வகிக்கும் ஜெர்மனியைச் சேர்ந்த மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் சி.எல்.இ. 53 கூபே என்ற புதிய ரகத்தை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த மாடல் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. இதில் 3.0 லிட்டர் டிவின் டர்போ என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு-ஹைபிரிட் சிஸ்ட உள்ளது.
இது அதிகபட்சமாக 449 எச்.பி பவரையும், 560 எம்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில் 9 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. 100 கி.மீ கேத்தை 4.2 நொடிகளில் எட்டும். அதிகபட்சமாக மணிக்கு 250 கி.மீ வேகம் வரை செல்லும்.
12.3 அங்குல டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே மற்றும் 11.9 அங்குல டிரைவர் ஓரியன்டட் டிஸ்பிளே உள்ளது. சவுண்ட் சிஸ்டம், ஹெட் அப் டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
இதன் ஆரம்ப ஷோரூம் விலை சுமார் ரூ.1.35 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.