செய்திகள் :

எம்.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்பப்பதிவு நீட்டிப்பு!

post image

எம்.எட். மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாட்டில் எம்.எட். பாடப்பிரிவுகள் கொண்டுள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 300 இடங்கள்  உள்ளன. இவ்விடங்களுக்கு 2025-26ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆக. 11முதல் தொடங்கப்பட்டது.

மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பப் பதிவினை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி விண்ணப்பப் பதிவு இன்றுடன் முடிவடைகிறது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தரவரிசையின் படி ஆக. 26 முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும்.

இதன் விவரம் எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயில் மூலம் மாணவர்களுக்கு அனுப்பப்படும். முதலாம் ஆண்டு வகுப்புகள் செப். 1 அன்று முதல் தொடங்கும். 

எம்.எட். சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதல்வரின் அறிவுறுத்தலுக்கிணங்க ஆக. 21 முதல் www.tngasa.inஎன்ற இணையதளம் வாயிலாக தொடர்ந்து விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் செப். 15 வரை மாணவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: மக்களாட்சியின் வேரிலேயே வெந்நீர் ஊற்றும் செயல்: பதவிநீக்க மசோதா குறித்து முதல்வர்!

புதுமண தம்பதிகளுக்கு இலவச பட்டுவேட்டி, பட்டுச் சேலை: இபிஎஸ் வாக்குறுதி!

எதிர்வரும் 2026 பேரவைத்தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்தால், புதுமண தம்பதிகளுக்கு இலவச பட்டுவேட்டி, பட்டுச் சேலை வழங்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.மக்களை க... மேலும் பார்க்க

இந்தியா கூட்டணி கடைப்பிடிக்கும் ஒரே அரசியலமைப்பு, ஊழல் மட்டுமே - அண்ணாமலை

அமைச்சர்கள், முதல்வர்கள் பதவிப்பறிப்பு தொடர்பான மசோதாவுக்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திமுக உள்பட இந்தியா கூட்டணியை பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.இதுகுறித்து, அவர் தனது ... மேலும் பார்க்க

மக்களை ஏமாற்றும் சென்னை மாநகராட்சி - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சுண்ணாம்பு கொளத்தூரில் மின்வயர் கேபிள்கள் சரிசெய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சி எடிட் செய்த புகைப்படம் வெளியிட்டதற்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.சென்னை மாநகராட்சி குறித்து ... மேலும் பார்க்க

மக்களாட்சியின் வேரிலேயே வெந்நீர் ஊற்றும் செயல்: பதவிநீக்க மசோதா குறித்து முதல்வர்!

முதல்வர்கள், அமைச்சர்கள் உள்ளிடோரை பதவியில் இருந்து நீக்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.அமைச்சர்கள், முதல்வர்கள், பிரதமர... மேலும் பார்க்க

சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

நீதித்துறையை விமர்சித்த புகாரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாம் தமிழர் கட்சியின்... மேலும் பார்க்க

கூலிக்கு யு/ஏ சான்றிதழ் கோரிய வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்துக்கு வழங்கியுள்ள ’ஏ’ சான்றிதழை ரத்து செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கக்கோரி படத் தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த வழக்கில், தணிக்கை வாரியம் பதிலளிக்கும்படி, சென்... மேலும் பார்க்க