ஃபிளிப்கார்ட்டில் ஐபோன் 16 விலை சரிவு! சலுகையுடன் வாங்குவது எப்படி?
குவஹாட்டி உயர்நீதிமன்றத்துக்கு 2 நிரந்தர நீதிபதிகள்: கொலிஜியம் ஒப்புதல்!
குவஹாட்டி உயர்நீதிமன்றத்தில் இரண்டு கூடுதல் நீதிபதிகளை நிரந்திர நீதிபதிகளாக நியமிக்கும் திட்டத்திற்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியத் தலைமை நீதிபதி பி,ஆர். கவாய் தலைமையிலான கொலிஜியம் ஆகஸ்ட் 19 அன்று கூட்டம் நடைபெற்றது.
குவஹாட்டி உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளான நீதிபதி பூடி ஹபுங், நீதிபதி என். உன்னி கிருஷ்ணன் நாயர் ஆகிய இருவரை நிரந்தர நீதிபதிகளாக நியமிப்பதற்கான திட்டத்திற்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.
நவம்பர் 10ஆம் தேதி முதல் ஓராண்டுக்குக் கூடுதல் நீதிபதி கௌசிக் கோஸ்வாமியை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கவும் கொலிஜியம் பரிந்துரைத்தது.