அமெரிக்கா: 33 ஆண்டுகளில் 24 மில்லியன் மைல்; விமான பயணத்தில் சாதனை; யார் இந்த பயண...
ஒருதலைக் காதல்! ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற மாணவர்!
மத்திய பிரதேசத்தில் ஆசிரியர் மீது எரிக்க முயன்ற மாணவர் கைது செய்யப்பட்டார்.
மத்திய பிரதேசம் மாநிலம், நரசிங்கபுரம் மாவட்டத்தில் சூர்யான்ஷ் கோச்சார் (18) என்ற மாணவர், தனது பள்ளியில் பணியாற்றிய 26 வயதுடைய ஆசிரியரை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார்.
இருப்பினும், கோச்சாரின் பள்ளியில் இருந்து ஆசிரியர் 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே விலகியபோதிலும், கோச்சாருக்கும் ஆசிரியருக்கும் இடையே பேச்சுவார்த்தை இருந்துள்ளது.
இந்த நிலையில், சுதந்திர தினத்தன்று, ஆசிரியர் கட்டியிருந்த சேலை குறித்து தகாத முறையில் கோச்சார் விமர்சித்துள்ளார். இதனையடுத்து, மாணவரின் மீது ஆசிரியர் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஆசிரியரை பழிவாங்கும் நோக்கில் திங்கள்கிழமையில் அவரின் வீட்டுக்குச் சென்ற மாணவர், தன்னுடன் எடுத்துச் சென்ற பெட்ரோலை, ஆசிரியர் மீது ஊற்றி, பற்ற வைத்துவிட்டு, சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினார்.
இருப்பினும், ஆசிரியரை அங்கிருந்தவர்கள் காப்பாற்றி, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியரின் உடலில் 10 முதல் 15 சதவிகித தீக்காயங்கள் ஏற்பட்டு, மோசமான நிலையில் உள்ளபோதிலும், உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, தப்பியோடிய கோச்சாரை கைது செய்த காவல்துறையினர், அவர் மீது வழக்குப்பதிவு செய்து, விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.