சத்தீஸ்கரில் ஒரே நாளில் 21 நக்சல்கள் சரண்!
சத்தீஸ்கரில், கூட்டாக ரூ.25.5 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட 13 பேர் உள்பட 21 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.
தண்டேவாடா மாவட்டத்தில், கூட்டாக ரூ.25.5 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 13 பேர் உள்பட 21 நக்சல்கள், அம்மாவட்ட காவல் துறை டிஐஜி ரங்கே கமலோச்சன் காஷ்யப் முன்னிலையில் இன்று (ஆக.20) சரணடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த 21 பேரில், பாரசேபா வனப் பகுதியில், பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட சம்பவத்தில் ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த கேயே (எ) கேஷா லேகம் என்பவரும் சரணடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தப் புதிய மாற்றமானது, மாவட்ட ரிசர்வ் காவல் படை, பஸ்தார் வீரர்கள், சிறப்புப் புலனாய்வுப் பிரிவு மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையினர் ஆகியோர் மேற்கொண்ட முயற்சிகளின் மூலம் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சத்தீஸ்கர் அரசின் மறுவாழ்வுத் திட்டத்தின்படி, சரணடைந்த நக்சல்களுக்கு ரூ.50,000 நிதியுதவி, விவசாய நிலம் உள்ளிட்ட ஏராளமான சலுகைகள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:ஒருதலைக் காதல்! ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற மாணவர்!