ஸ்டாலின் அண்ணாச்சி, உங்கள் வாக்குறுதி என்னாச்சி? நயினார் நாகேந்திரன் அடுக்கிய க...
ஆக.25ல் ரயில்வே திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி!
குஜராத்திற்கு ஆகஸ்ட் 25ல் வருகைதரும் பிரதமர் மோடி ரயில்வே திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என குஜராத் முதல்வர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்த திட்டங்கள் குறிப்பாக வடக்கு குஜராத்தில் உள்ள மஹேசானா, படான், பனஸ்கந்தா, காந்திநகர் மற்றும் அகமதாபாத் மாவட்டங்களுக்கு பயனளிக்கும். மேலும் பிராந்திர இணைப்பை மேம்படுத்தும், தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும், தளவாட செயல்திறமை மேம்படுத்தும் மற்றும் வேலைவாய்ப்புக்கான புதிய வழிகளை உருவாக்கும்.
65 கி.மீ. நீளமுள்ள மகேசனா-பலன்பூர் ரயில் பாதையை ரூ. 537 கோடி செலவில் இரட்டிப்பாக்குதல், 37 கி.மீ. நீளமுட்ளள கலோல்-காடி-கடோசன் சாலை ரயில் பாதையை ரூ. 347 கோடி செலவிலும், 40 கி.மீ நீளமுள்ள பெக்ராஜி-ராணுஜ் ரயில் பாதையை ரூ. 520 கோடி செலவில் பாதை மாற்றம் செய்யப்படும்.
இவை பயண நேரத்தைக் குறைக்கும், புதிய முதலீடுகளை ஈர்க்கும் மற்றும் பிராந்திய தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும். இந்த அனைத்து ரயில்வே திட்டங்களும் விக்சித் குஜராத் வழியாக விக்சித் பாரதத்திற்கு வழி வகுக்கும் என்று அவர் கூறினார்.