செய்திகள் :

நெல்லையில் பாஜக பூத் கமிட்டி மாநாடு தொடங்கியது

post image

திருநெல்வேலியை அடுத்த தச்சநல்லூா் அருகே பாஜக பூத் கமிட்டி மாநாடு வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது.

மாநாட்டில் பங்கேற்றுள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சிறப்புரையாற்றுகிறாா். மேலும் மாநாட்டில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகா் மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய 28 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த 8,595 பூத் கமிட்டிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இதில், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ, மத்திய அமைச்சா் எல்.முருகன், முன்னாள் மாநிலத் தலைவா்கள் அண்ணாமலை, தமிழிசை சௌந்திரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினா் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

திமுகவை அகற்றுங்கள்; தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி: நெல்லையில் அமித் ஷா பேச்சு!

நெல்லை: தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி மீண்டும் வரும் என்று நெல்லையில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார்.வரும் சட்டப்பேரவைத் ... மேலும் பார்க்க

அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் கே.எஸ். ராதாகிருஷ்ணன்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் இணைந்தார். திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் குமரி மண்டல பூத் முகவர்கள்... மேலும் பார்க்க

தமிழில் பேச முடியவில்லையே என வருந்துகிறேன்: அமித் ஷா

நெல்லை: தமிழில் பேச முடியாததற்கு வருந்துகிறேன் என்று நெல்லையில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார். நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு புறவ... மேலும் பார்க்க

ஸ்டாலின் அண்ணாச்சி, உங்கள் வாக்குறுதி என்னாச்சி? நயினார் நாகேந்திரன் அடுக்கிய கேள்விகள்!

நெல்லை: திமுக தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றவில்லை என்றும், ஒன்றிரண்டை மட்டும் நிறைவேற்றிவிட்டு மற்ற வாக்குறுதிகளை மறந்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சா... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டியது கடமை: அண்ணாமலை

நெல்லை: தமிழகத்தில், எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டியது தேசிய ஜனநாயகக் கூட்டணி தொண்டர்களின் கடமை என்று முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.அமித் ஷா தலைமையில் நெல்லையில் பாஜக பூ... மேலும் பார்க்க

எந்த கொள்கையும் இல்லாத கட்சி தவெக: நயினார் நாகேந்திரன்

எந்த கொள்கையும் இல்லாத கட்சி தவெக என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பூத் கமிட்டி இன்று மாலை 6 மணி அளவில் தச்சநல்லூர் பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெற... மேலும் பார்க்க