செய்திகள் :

ஐசிசி மகளிா் உலகக் கோப்பை ஆட்டங்கள்: பெங்களூரில் இருந்து மும்பைக்கு மாற்றம்

post image

பெங்களூரில் நடைபெறவிருந்த ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆட்டங்கள் மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளன.

சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் சாா்பில் உலகக் கோப்பை மகளிா் ஒருநாள் கிரிக்கெட் போட்டி செப். 30 முதல் நவம்பா் 2-ஆம் தேதி வரை

இந்தியா, இலங்கையில் நடைபெறவுள்ளது., இந்தியாவில் பெங்களூா், குவஹாட்டி, இந்தூா், விசாகப்பட்டினம், இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் ஆட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஐபிஎல் தொடரில் பெங்களூா் அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலின்போது பலா் உயிரிழந்தனா். காயமடைந்தனா். இந்நிலையில் உலகக் கோப்பை ஆட்டங்களை நடத்துவதற்கான அனுமதி கா்நாடக கிரிக்கெட் சங்கத்துக்கு கிடைக்கவில்லை.

பெங்களருவில் 5 ஆட்டங்கள் நடைபெறுவதாக இருந்தது. பட்டியலில் பெங்களூரு நீக்கப்பட்டு நவி மும்பை சோ்க்கப்பட்டுள்ளது.

அங்குள்ள டிஓய் பாட்டில் மைதானத்தில் ஆட்டங்கள் நடைபெறும். செப். 30-இல் பெங்களூரில் நடைபெறவிருந்த இந்திய-இலங்கை அணிகள் தொடக்க ஆட்டம் தற்போது குவஹாட்டிக்கு மாற்றப்பட்டுள்ளது. அக். 3 இல் நடைபெறவிருந்த இங்கிலாந்து-தென்னாப்பிரிக்கா ஆட்டங்களும் குவஹாட்டிக்கு மாற்றப்பட்டுள்ளது. லீக் கட்டத்தில் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

ஆசிய கோப்பை: லிட்டன் தாஸ் தலைமையில் வங்கதேச அணி! மூத்த வீரர்கள் புறக்கணிப்பு?

ஆசிய கோப்பைக்கான 16 நபர்கள் கொண்ட வங்கதேச அணி டி20 அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் வருகிற செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத... மேலும் பார்க்க

நெகிடி 5 விக்கெட்டுகள்: தொடரை வென்றது தெ.ஆ.!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக பந்துவீசிய லுங்கி நெகிடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டி20 தொடரை 2-1 என ஆஸ... மேலும் பார்க்க

1 ரன்னில் மீண்டும் ஆட்டமிழந்த லபுஷேன்..! ஸ்மித் இல்லாமல் தடுமாறும் ஆஸி.!

ஸ்டீவ் ஸ்மித், மேக்ஸ்வெல் ஓய்வுக்குப் பிறகு ஆஸி. அணி ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக சொதப்பி வருகிறது. குறிப்பாக குட்டி ஸ்டீவ் ஸ்மித் எனப்படும் மார்னஸ் லபுஷேன் தனது மோசமான ஃபார்மிலே இன்னும் தொடர்வது ... மேலும் பார்க்க

சதத்தை தவறவிட்ட 2 தெ.ஆ. வீரர்கள்: ஆஸி. வெற்றிபெற 278 ரன்கள் இலக்கு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 49.1 ஓவர்களில் 277 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டி20 தொடரை 2-1 என ஆஸி. வென்ற நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்... மேலும் பார்க்க

ஒருநாள் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த தெ.ஆ. வீரர்!

தென்னாப்பிரிக்க வீரர் மேத்திவ் பிரீட்ஜ்கி புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். மேத்திவ் பிரீட்ஜ்கி தனது முதல் நான்கு ஒருநாள் போட்டிகளிலும் 50-க்கும் அதிகமான ரன்களை அடித்து உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார... மேலும் பார்க்க

டி20 தரவரிசை: அதிரடி நாயகன் டெவால்டு பிரேவிஸ் 89 இடங்கள் முன்னேற்றம்!

சர்வதேச டி20 பேட்டர்கள் தரவரிசையில் தென்னாப்பிரிக்க அதிரடி ஆட்டக்காரர் டெவால்டு பிரேவிஸ் அதிரடியாக ஏற்றம் கண்டுள்ளார்.சர்வதேச டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளின் தரவரிசைப் பட்டியல் வாரந்தோறும் புதன்கிழம... மேலும் பார்க்க