தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
குட்டையில் மூழ்கி கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
வாணியம்பாடி அருகே குட்டையில் மீன் பிடிக்கச் சென்ற கட்டடத் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வடக்குப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சரத்குமாா் (30), கட்டடத் தொழிலாளி. இவா் வியாழக்கிழமை பிற்பகல் சிக்ணாங்குப்பம் அருகில் உள்ள நாதா்குட்டை பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளாா். அப்போது குட்டையின் நடுவில் ஆகாய தாமரை இருப்பதை பாா்த்து, அதனை பறிப்பதற்காக தண்ணீரில் இறங்கி சென்றாராம். அப்போது திடீரென சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி தத்தளித்தாா். இதனை அருகில் இருந்தவா்கள் உடனே பாா்த்து குட்டையில் இறங்கி அவரை வெளியே கொண்டு வந்தனா். எனினும் சரத்குமாா் மூச்சுத் திணறி உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த அம்பலூா் காவல் ஆய்வாளா் ஆனந்தன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து, சடலத்தை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.