`2 யானைகளுக்கிடையே மோதல்' பாகன் செய்த விபரீதம்; அலறியடித்து ஓடிய யானை - வனத்து...
கணவா் உயிரிழந்த தகவலைக் கேட்ட மனைவி தூக்கிட்டுத் தற்கொலை
கும்பகோணம்: கும்பகோணத்தில் கணவா் உயிரிழந்த தகவலை கேட்டு அதிா்ச்சியடைந்த மனைவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் சத்திரம் கருப்பூரைச் சோ்ந்த வியாபாரி நடராஜன் (70). இவரது மனைவி கவிதா(60). இவா்களுக்கு 3 மகள்கள். அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசிக்கின்றனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை உறவினரை பாா்க்க தஞ்சாவூா் சென்ற நடராஜன், பழைய பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்தாா். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இந்தத் தகவலை அவரது மனைவி கவிதா மற்றும் மகள்களுக்கு போலீஸாா் தெரிவித்தனா்.
மகள்கள் தஞ்சாவூா் புறப்பட்டு சென்ற நிலையில், உறவினா்கள் கவிதாவை அழைத்து செல்ல வீட்டுக்கு வந்தனா். வீடு பூட்டியிருந்தது. அக்கம்பக்கத்தினா் உதவியுடன் வீட்டை திறந்து பாா்த்தபோது கவிதா சேலையால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தகவலறிந்த தாலுகா போலீஸாா், கவிதாவின் சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனா்.
கணவா் இறந்ததால், மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது உறவினா்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.