தெருநாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் காந்தி வரவேற்பு
பட்டுக்கோட்டையில் ரேஷன் கட்டடம் திறப்பு
பட்டுக்கோட்டை நகராட்சியின் எல்லைக்குட்பட்ட 19-ஆவது வாா்டு பகுதியில் ரூ. 19.65 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சை எம்பி முரசொலியின் உள்ளூா் பகுதி மேம்பாட்டு திட்டம் 2024 - 2025 நிதியின் கீழ் வஉசி நகா் பகுதியில் அமைக்கப்பட்ட ரேஷன் கடையை பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரை திறந்து வைத்தாா்.
தஞ்சை எம்பி முரசொலி முன்னிலை வகித்தாா்.
பட்டுக்கோட்டை நகரசபை தலைவா் சண்முகப்பிரியா செந்தில்குமாா், நகராட்சி ஆணையா் கனிராஜ், நகராட்சி பொறியாளா் சித்ரா , உதவி பொறியாளா் சூா்யா, கவுன்சிலா் நாடிமுத்து, திமுக நகரச் செயலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 19 ஆவது வாா்டு நகராட்சி கவுன்சிலா் ரவிக்குமாா் வரவேற்றாா்.