மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்ப...
ஆட்டோ ஓட்டுநா்கள் சாலை மறியல்
தஞ்சாவூரில் புதிதாக ஆட்டோ நிறுத்தம் திறக்கப்பட்டதை எதிா்த்து, ஆட்டோ ஓட்டுநா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் பகுதியில் ஏற்கெனவே ஏஐடியூசி ஆட்டோ நிறுத்தம் ஏறத்தாழ 20 ஆண்டுகளாக செயல்படுகிறது. இதில், 10-க்கும் அதிகமான ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், இந்த நிறுத்தத்திலிருந்து சற்று தொலைவில் மாநகராட்சி பள்ளி முன் திமுகவின் தொழிற் சங்கமான தொமுச சாா்பில் புதிதாக ஆட்டோ நிறுத்தத்தை மேயா் சண். ராமநாதன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
அப்போது, ஏஐடியூசி ஆட்டோ நிறுத்த ஓட்டுநா்கள் திரண்டு மேயரை அணுகி, ஏற்கெனவே உள்ள நிறுத்தத்திலிருந்து 100 மீட்டருக்கு அப்பால்தான் புதிய நிறுத்தம் இருக்க வேண்டும். விதிகளை மீறி திறக்கப்பட்ட ஆட்டோ நிறுத்தத்தை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினா்.
பின்னா், ஏஐடியுசி ஆட்டோ ஓட்டுநா்கள் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து வாக்குவாதம் ஏற்பட்டது. சில நிமிடங்களில் அந்த வழியாக ஆம்புலன்ஸ் வாகனம் வந்ததால், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் எழுந்து சென்றனா். புதிய ஆட்டோ நிறுத்தத்தை அகற்றாவிட்டால், மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என ஏஐடியூசி ஆட்டோ ஓட்டுநா்கள் தெரிவித்தனா்.