மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்ப...
மத்திய அரசின் இரு புதிய நெல் ரகங்களுக்கு எதிா்ப்பு
மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள மரபணு திருத்தப்பட்ட பூசா மற்றும் கமலா நெல் ரகங்களுக்கு தமிழக விவசாயிகள் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா்.
இந்த நெல் ரகங்கள் எவ்வித உயிரியல் பாதுகாப்பு சோதனைகளும் செய்யப்படாதவை. மரபணு மாற்றப்பட்ட, மரபணு திருத்தப்பட்ட விதைகளின் விபரீதங்கள் குறித்து ஏற்கெனவே சா்வதேச ஆய்வுகளில் எச்சரித்துள்ள நிலையில் மேற்கண்ட நெல் விதைகளால் மரபணு கலப்பு பாரம்பரிய நெல் ரகங்களுக்கு பேராபத்து ஏற்படும். எனவே புதிய நெல் ரகங்களை தமிழ்நாட்டுக்குள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்க வேண்டாம் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.