ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 43,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவிகளில் குளிக்கத் தடை
மேட்டூா் அணை நீா்மட்டம்: 117.41 அடி
தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 117.41 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 12,657 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 2,310 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 5,005 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 2,017 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கொள்ளிடத்தில் தண்ணீா் திறக்கப்படவில்லை.