சென்னையில் மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் பலி: மக்கள் சாலை மறியல்
ஓய்வுபெற்ற போக்குவரத்து பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்
கும்பகோணம்: கும்பகோணத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக கோட்ட தலைமை அலுவலகம் முன்பு சிஐடியு தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினா்.
போராட்டத்துக்கு சிஐடியு மண்டலத் தலைவா் டி. காரல் மாா்க்ஸ் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டத் தலைவா் எம். கண்ணன் முன்னிலை வகித்தாா். பொதுச் செயலா் மணிமாறன் போராட்டத்தை தொடங்கி வைத்தாா்.
இதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தனியாா் மயமாக்குவதை கைவிட வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். போக்குவரத்து துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அனைத்து பணிமனைகளிலும் பெண்களுக்கு என்று தனியே ஓய்வறை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் மாநிலத் துணைத் தலைவா் ஆா். மனோகரன், செங்குட்டுவன், எஸ். ரகு உள்ளிட்டோா் பேசினா்.