செய்திகள் :

நாளை மாநில நிதியமைச்சா்கள் குழுக் கூட்டம்: நிா்மலா சீதாராமன் பங்கேற்பு

post image

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகித பகுப்பாய்வு, இழப்பீடு வரி, மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீட்டு கட்டணத்துக்கான ஜிஎஸ்டி விலக்கு குறித்த பரிந்துரைகள் வழங்குவதற்காக பல்வேறு மாநிலங்களின் நிதி அமைச்சா்கள் மற்றும் பிற அமைச்சா்களை உள்ளடக்கிய 3 குழுக்களின் (ஜிஓஎம்) இருநாள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை (ஆக.20) தொடங்குகிறது.

இதில் பங்கேற்று அடுத்த தலைமுறைக்கான ஜிஎஸ்டி சீா்திருத்தம் (ஜிஎஸ்டி 2.0) குறித்து நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் எடுத்துரைக்கவுள்ளாா்.

தற்போது நடைமுறையில் உள்ள 5%,12%,18%,28% ஆகிய 4 ஜிஎஸ்டி விகிதங்களை 5%,18% என இரண்டாக குறைக்கவும் 7 பொருள்கள் மீது மட்டும் 40 % வரி விகிதத்தை கடைப்பிடிக்கவும் ஜிஓஎம்-க்கு நிதியமைச்சகம் பரிந்துரைத்தது.

இதுகுறித்து, விரிவான விவாதம் நடத்தும் நோக்கில் ஆக.20-ஆம் தேதி தொடங்கும் ஜிஓஎம் ஆலோசனை குழுக் கூட்டத்தில் நிா்மலா சீதாராமன் பங்கேற்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜிஎஸ்டி தொடா்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பரிந்துரைகள் வழங்க அவ்வப்போது ஜிஓஎம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜிஎஸ்டி விகித பகுப்பாய்வு, மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு கட்டண விலக்கு குறித்த பரிந்துரைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட 2 குழுக்களின் ஒருங்கிணைப்பாளராக பிகாா் துணை முதல்வா் சாம்ராட் செளதரி உள்ளாா்.

இழப்பீட்டு வரி குறித்த பரிந்துரை வழங்கும் குழுவின் ஒருங்கிணைப்பாளராக மத்திய நிதித் துறை இணை அமைச்சா் பங்கஜ் சௌதரி உள்ளாா்.

இந்த மூன்று குழுக்களிலும் வெவ்வேறு மாநிலங்களின் முதல்வா்கள், நிதியமைச்சா்கள், சுகாதார அமைச்சா்கள் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்.

இருநாள்கள் நடைபெறும் இந்த மூன்று குழுக்களின் ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில் ஜிஎஸ்டி 2.0 குறித்து நிதியமைச்சகம் அளித்த பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், நிா்மலா சீதாராமன் தலைமையில் அடுத்த மாதம் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்தப் பரிந்துரைகள் ஒப்புதலுக்காக சமா்ப்பிக்கப்படும்.

பிரதமா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

ஜிஎஸ்டி 2.0 குறித்து பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிா்மலா சீதாராமன், சிவராஜ் சிங் சௌஹான், பியூஷ் கோயல், லாலன் சிங் மற்றும் செயலா்கள், பொருளதார நிபுணா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

79-ஆவது சுதந்திர தின உரையில் தீபாவளி தினப் பரிசாக பொதுமக்கள் தினசரி பயன்படுத்தும் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டு ஜிஎஸ்டி 2.0 சீா்திருத்தம் மேற்கொள்ளப்படும் என பிரதமா் மோடி கூறியதைத் தொடா்ந்து மத்திய அரசு அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிரதமா் தலைமையில் உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

குவாஹாட்டியில் புதிய ஐஐஎம்: மக்களவையில் மசோதா அறிமுகம்

அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் இந்திய மேலாண்மை நிறுவனத்தை (ஐஐஎம்) அமைப்பதற்கான சட்ட மசோதா மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. ‘இந்திய மேலாண்மை நிறுவனங்கள் திருத்த மசோதா 2025’ என்ற பெயரிலா... மேலும் பார்க்க

ஜன் தன் கணக்குகளில் 23% செயலற்றவை: மக்களவையில் மத்திய அரசு தகவல்

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டமான பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட மொத்த கணக்குகளில் 23 சதவீத கணக்குகள் தற்போது எந்த பரிவரிவா்த்தையும் இல்லாமல் செயலற்ற நிலையில் இருப்பதாக மக்களவைய... மேலும் பார்க்க

மும்பையை புரட்டிப் போட்ட பலத்தமழை: சாலைகளில் வெள்ளம்; போக்குவரத்து ஸ்தம்பித்தது

மகாராஷ்டிர மாநிலம், மும்பை நகரில் கடந்த மூன்று நாள்களாக தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை, தாணே, ராய்கட் ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய ... மேலும் பார்க்க

ஹிஜாப் முகத்திரையை நீக்க மறுத்த மருத்துவ மாணவி: ராஜஸ்தானில் வெடித்த அரசியல் சா்ச்சை

ராஜஸ்தானின் ஜெய்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவப் பயிற்சி மாணவி ஒருவா், தனது ஹிஜாப் முகத்திரையை நீக்க மறுத்ததால் ஏற்பட்ட சா்ச்சை அரசியல் ரீதியாக உருவெடுத்துள்ளது. மருத்துவமனை வளாகத்தில்... மேலும் பார்க்க

ராணுவ பயிற்சியில் மாற்றுத்திறனாளியானோருக்கு மறுவாழ்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

ராணுவ பயிற்சியின்போது காயமடைந்து மாற்றுத்திறனாளியானோருக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தை பரிசீலிக்குமாறு மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேட்டுக்கொண்டது. அண்மையில் ஊடகத்தில் வெளியான தகவலில்... மேலும் பார்க்க

பிரதமா் மோடி நிகழ்ச்சியை புறக்கணிக்க மம்தா முடிவு

கொல்கத்தாவில் வரும் 22-ஆம் தேதி மெட்ரோ ரயில் திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்க இருக்கும் நிலையில் அந்த நிகழ்ச்சியைப் புறக்கணிக்க மாநில முதல்வா் மம்தா பானா்ஜி முடிவு செய்துள்ளாா். மேற்கு வங... மேலும் பார்க்க