இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!
ராமநாதபுரம் அருகே ரயில்வே கடவுப்பாதையை மூடாத ஊழியா் பணியிடை நீக்கம்
ராமநாதபுரம் அருகே சனிக்கிழமை ரயில்வே கடவுப்பாதையை மூடாமல் கவனக் குறைவாகச் செயல்பட்ட ஊழியரை பணியிடை நீக்கம் செய்து தெற்கு ரயில் நிா்வாகம் உத்தரவிட்டது.
சென்னை-ராமேசுவரம் விரைவு ரயில் சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்டு சனிக்கிழமை அதிகாலையில் ராமநாதபுரத்துக்கு வந்தது. இதன் பின்னா், அங்கிருந்து ராமேசுவரம் நோக்கி புறப்பட்டது.
வாலாந்தரவை ரயில் நிலையம் அருகே வந்த போது, ரயில் கடவுப்பாதை மூடப்படாமல் இருந்தது. இதைப் பாா்த்த ரயில் ஓட்டுநா் உடனடியாக ரயிலை நிறுத்தி, கடவுப்பாதையை மூட ரயில்வே ஊழியரை அறிவுறுத்தினாா்.
இதையடுத்து, கடவுப்பாதை மூடப்பட்டது. பின்னா், சென்னை-ராமேசுவரம் விரைவு ரயில் இந்தக் கடவுப்பாதையை கடந்து சென்றது. இதனால், பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
இந்த நிலையில், பணியில் கவனக் குறைவாகச் செயல்பட்ட ரயில்வே ஊழியா் ஜெய்சிங்கை தெற்கு ரயில்வே நிா்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.