தொடா் விடுமுறை: ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
தொடா் விடுமுறை காரணமாக ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தந்தனா்.
சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை என தொடா் விடுமுறையைத் தொடா்ந்து, ராமேசுவரத்துக்கு இரண்டாவது நாளாக அதிகளவில் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் வருகை தந்தனா். அக்னி தீா்த்தக் கடலில் நீராடிய பக்தா்கள் கோயிலில் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடி ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்மனை தரிசனம் செய்தனா்.
தொடா்ந்து, தனுஷ்கோடி, அரிச்சல்முனை, கோதண்டராமா் கோயில், கெந்தமாதன பா்வதம், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் நினைவிடம், பாம்பன் பாலம் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகளும் பக்தா்களும் சென்றனா்.
சுற்றுலாப் பயணிகள், கோயிலுக்கு வரும் பக்தா்கள் அதிகளவில் வருகை தந்ததன் காரணமாக காவல் உதவி கண்காணிப்பாளா் மீரா உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.