ஆக.23-இல் மண்ணச்சநல்லூரில் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்
ஆசிய கோப்பை: இந்திய அணியில் யாருக்கெல்லாம் வாய்ப்பு?
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
ஆசிய கண்டத்திலிருந்து 8 முக்கிய அணிகள் பங்கேற்கும் இந்தப் பிரம்மாண்ட கிரிக்கெட் திருவிழாவில் முதல் டி20 ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9 நடைபெறுகிறது. இறுதிப்போட்டி நடைபெறும் செப். 28-இல் ஆசிய கோப்பை சாம்பியன் யார்? என்பது தெரிந்துவிடும்.
ஆசிய கோப்பையில் விளையாடும் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள 15 பேர் கொண்ட அணி செவ்வாய்க்கிழமை(ஆக. 19) அறிவிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தேர்வுக் குழுவினர் செவ்வாய்க்கிழமை(ஆக. 19) வீரர்கள் தேர்வில் ஈடுபடவுள்ளனர். அதன்பின், பகல் 1.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விராட் கோலி, ரோகித் ஷர்மா விலகிவிட்ட நிலையில், இளம் வீரர்கள் பலரும் போட்டியில் இருப்பதால் யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்ற ஆவல் அதிகரித்துள்ளது.