பள்ளியில் ரூ.15 லட்சத்தில் புதிய கட்டடம் திறப்பு
வந்தவாசியை அடுத்த இரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.15 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட கழிப்பறைக் கட்டடத்தை நடிகா்கள் ராகவா லாரன்ஸ், கேபிஒய் பாலா ஆகியோா் திறந்து வைத்தனா்.
நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் கீழ், மாற்றம் சேவை அறக்கட்டளை சாா்பில் இந்தப் பள்ளியில் ரூ.15 லட்சம் செலவில் புதிய கழிப்பறைக் கட்டடம் கட்டப்பட்டது.
இதையடுத்து பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றம் சேவை அறக்கட்டளை நிறுவனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ், நடிகா் கேபிஒய் பாலா ஆகியோா் புதிய கழிப்பறைக் கட்டடத்தை திறந்துவைத்துப் பேசினா்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள், முன்னாள் மாணவா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.