Roja: "'ரோஜா' படத்தை முடித்த பிறகு, நான் வெளிநாட்டிற்குக் கிளம்பிவிட்டேன், காரணம...
3-ஆவது திருமணத்துக்குப் பின் காதலனுடன் ஓடிய இளம்பெண்: பேத்தியைக் கொன்று வீசிய தாத்தா - பாட்டி!
3-ஆவது திருமணம் செய்துகொண்ட இளம்பெண் ஒருவர் அதன்பின் தனது காதலனுடன் ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைத்தொடர்ந்து, அந்தப் பெண்ணின் 6 வயது மகளை, பெண்ணின் பெற்றோர் கொன்று வீசிய கொடுந்துயரமும் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் அரங்கேறியுள்ளது.
வீட்டைவிட்டுச் செல்லும் முன் அந்த இளம்பெண் தமது ஒரே மகளை தமது பெற்றோரிடம் விட்டுச் சென்றுள்ளார். இந்தநிலையில், தாயைக் காணாததால் அடம்பிடித்து அழுதுகொண்டிருந்த குழந்தையை, இளம்பெண்ணின் பெற்றோர் ஆத்திரத்தில் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு அப்பகுதியில் நெடுஞ்சாலையோரம் ஓடும் கால்வாயில் உடலை வீசிச்சென்றுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, சடலத்தைக் கைப்பற்றி போலீஸார் மேற்கண்ட விசாரணையில் கொல்லப்பட்ட குழந்தையின் தாத்தாவும் பாட்டியும் நடந்தவற்றை சொல்லி குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அவர்கள் மீது கொலைக் குற்றத்தின்கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடைபெறுகிறது.