காரைக்கால் நகரில் 50 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு
விரைவில் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹானர் ஸ்மார்ட்போன்!
புதுதில்லி: சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹானரின் பிராண்ட் பார்ட்னரான பி.எஸ்.ஏ.வி. குளோபல் (PSAV Global), அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் தயாரிப்பதற்காக மின்னணு ஒப்பந்த உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாக தெரிவித்தது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்டும் ஹானர் ஸ்மார்ட்போன்கள் மூலம் ஆண்டிற்கு 1 சதவிகித சந்தைப் பங்கைப் பெற நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும், இதன் விளைவாக சுமார் ரூ.2,500 கோடி வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளதாகவும் பிஎஸ்ஏவி குளோபல் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சி. பி. கண்டேல்வால் தெரிவித்தார்.
உற்பத்தி தொடங்கிய பிறகு, எங்கள் இலக்கு தோராயமாக 1 சதவிகித சந்தைப் பங்கை அடைவதாகும். இது சுமார் ரூ.2,500 கோடி வருவாயாக இருக்கும். உற்பத்தி நடவடிக்கைகளின் முதல் வருடத்திற்குள் இந்த இலக்கு அடையப்படும்.
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான உலகளாவிய மொபைல் போன் விநியோகங்கள் குறித்த கவுண்டர்பாயிண்ட் ஆராய்ச்சி அறிக்கையின்படி, முதல் 5 பிராண்டுகளைத் தவிர, ஹானர் வேகமாக வளர்ந்து வரும் பிராண்டுகளில் ஒன்றாகும் என்றது.
ஹானர் ஏற்கனவே ஹானர் X9c ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, அதைத் தொடர்ந்து இந்த மாதம் ஹானர் X7c ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
நிறுவனம் இப்போது ஹானர் V3 மற்றும் ஹானர் மேஜிக் 7 ப்ரோவை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.
இதையும் படிக்க: அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதக் குறைப்பு நம்பிக்கையால் பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!