செய்திகள் :

இதுவரை இல்லாத பேட்டரி திறன்... விவோ ஒய் 500 சிறப்புகள் என்ன?

post image

விவோ ஒய் 500 ஸ்மார்ட்போன் சீனாவில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் தற்போது வெளியாகவில்லை என்றாலும், சீனாவில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இந்தியாவிலும் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு காரணம், ஸ்மார்ட்போன்களில் இதுவரை இல்லாத வகையில் 8200mAh பேட்டரி திறன் வழங்கப்பட்டுள்ளது.

பயனர்களின் முக்கியமான குறைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் அதிக பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் வேகமான புராசஸர்களுக்கு ஏற்ப நீடித்த திறனுடன் விவோ ஒய் 500 அறிமுகமாகியுள்ளது.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட விவோ நிறுவனம், இந்திய சந்தைகளில் நம்பகத்தகுந்த இடத்தைப் பெற்றுள்ளது. இதனால், விவோ தயாரிப்புகளுக்கு இந்திய பயனர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

சிறப்பம்சங்கள் என்னென்ன?

விவோ ஒய் 400 ஸ்மார்ட்போன், 8200mAh பேட்டரி திறன் உடையது.

டைமன்சிட்டி 7300 புராசஸர் கொண்டது.

தொடுதிரை சுமுகமாக இயங்கும் வகையில், 120Hz திறன் வழங்கப்பட்டுள்ளது. சீனாவில் அறிமுகமாகியுள்ள நிலையில், இந்தியாவில் சில மாற்றங்களுடன் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க | இந்தியாவில் ஓப்போ எஃப் 31 விரைவில் அறிமுகம்!

Vivo Y500 5G Could Feature the Largest Battery on a Vivo Phone

வீட்டுக் காப்பீட்டை அறிமுகப்படுத்தும் போன்பே!

புதுதில்லி: ஃபின்டெக் நிறுவனமான ஃபோன்பே, தீ, வெள்ளம், பூகம்பங்கள், கலவரங்கள் மற்றும் திருட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அபாயங்களுக்கு நிகரான காப்பீடு வழங்கும் புதிய வீட்டுக் காப்பீட்டு திட்டத்தை அறிம... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.87.58ஆக நிறைவு!

மும்பை: வலுவான அமெரிக்க டாலர் மற்றும் கச்சா எண்ணெய் விலை மீட்சியை தொடர்ந்து டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.87.58 ஆக முடிவடைந்தது.ஆகஸ்ட் 27 கட்டண காலக்கெடுவை அமல்படுத்துவத... மேலும் பார்க்க

இந்தியாவில் ஓப்போ எஃப் 31 விரைவில் அறிமுகம்!

ஓப்போ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான எஃப் 31 வரிசை ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. ஓப்போ எஃப் 31 மற்றும் ஓப்போ எஃப் 31 ப்ரோ ஆகிய இரு ஸ்மார்ட்போன்களும் செப். 12 அல்லது 14ஆம் தேதி ... மேலும் பார்க்க

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதக் குறைப்பு நம்பிக்கையால் பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!

மும்பை: அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதக் குறைப்பு என்ற நம்பிக்கையின் அடிப்படையில், இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகள் மீண்டும் உயர்ந்து முடிவடைந்தன.இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள்... மேலும் பார்க்க

சிபில் ஸ்கோர் அவசியமில்லை.. வங்கிகளுக்கு ஆர்பிஐ சொல்லும் அறிவுரை

முதல்முறையாக கடன்பெற விண்ணப்பிப்பவர்களுக்கு குறைந்தபட்ச சிபில் ஸ்கோர் அவசியமில்லை என்பதை மத்திய நிதியமைச்சகம் தெளிவுபடுத்தியிருக்கிறது.மழைக்காலக் கூட்டத்தொடரின்போது, மக்களவையில் விளக்கம் அளித்துப் பேச... மேலும் பார்க்க

ஏற்றத்தில் பங்குச் சந்தை! ஐடி பங்குகள் விலை உயர்வு!

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று(ஆக. 25) காலை 81,501.06 என்ற புள்ளிகளில் தொடங்கிய நில... மேலும் பார்க்க