`துரதிஷ்டவசமாக நான் அவனை நம்பினேன். ஆனால்!' திருமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்...
குஜராத்தில் பிரதமர் மோடி சாலைவலம்: ஆயிரக்கணக்கானோர் திரண்டு வரவேற்பு!
குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஆக. 25) மாலை சாலைவலம் சென்றார். அப்போது வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வரவேற்பளித்தனர்.
நலத்திட்டங்களைத் தொடக்கி வைப்பதற்காக அகமதாபாத் நகருக்குச் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பளித்ததைக் காண முடிந்தது. தமது காரின் முன்பக்க கதவைத் திறந்தபடி காரில் காலை ஊன்றி நின்றபடியே வெளியே திரண்டிருந்த மக்களை நோக்கி அவர் கையசைத்தபடி விழா மேடைக்குச் சென்றார். அதன்பின், ரூ. 5,400 கோடியிலான பல்துறை வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி குஜராத்தில் இன்று தொடக்கி வைத்தார்.