இந்தியா - பாக். சண்டை: அமெரிக்காவின் வர்த்தக ரீதியான மிரட்டலால் முடிவுக்கு வந்த...
காமன்வெல்த் போட்டி: தங்கம் வென்றார் மீராபாய் சானு!
காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு இன்று (ஆக. 25) தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், இன்று நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில், இந்திய வீராங்கனையும் டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான மீராபாய் சானு பங்கேற்றார்.
48 கிலோ எடை பெண்கள் பிரிவில் பங்கேற்ற மீராபாய் சானு, மொத்தம் 193 கிலோ எடையைத் தூக்கி காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
இதன்மூலம், அடுத்த ஆண்டு காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டிக்கு நேரடியாக மீரபாய் சானு தகுதி பெற்று அசத்தியுள்ளார்.
2023 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியின்போது காயம் ஏற்பட்டதால், பல மாதங்களாக எந்தவொரு போட்டிகளிலும் பங்கேற்காமல் ஓய்வில் இருந்தார். பின்னர், பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்று 4 வது இடத்தைப் பிடித்தார்.
தற்போது, காயத்திலிருந்து முழுமையாக மீண்டு, காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
இதையும் படிக்க | பிசிசிஐ - டிரீம் 11 இடையிலான ஒப்பந்தம் ரத்து!