செய்திகள் :

``கூட்டத்துக்கு வந்தீங்களா, சாப்பிட வந்தீங்களா?'' - முன்னாள் அமைச்சரின் எரிச்சல் பேச்சு

post image

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஏஜெண்டுகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டார். காலை 11:00 மணிக்கு நத்தம் விஸ்வநாதன் பேசுவார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் மதியம் ஒரு மணிக்கு தான் மேடை ஏறி பேசினார்.

முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேச ஆரம்பித்த சில நிமிடங்களில் அவரின் பேச்சைக் கேட்காமல் கூட்டத்தில் அமர்ந்திருந்த அதிமுகவினர் கொத்தாக கிளம்பி சாப்பிட சென்றார்கள்.

அதிமுக பூத் கமிட்டி ஏஜெண்ட் கூட்டம்

மேடையில் இருந்த அதிமுக நிர்வாகிகள் சாப்பிட சென்றவர்களை மீண்டும் அமரச் சொல்லி அழைத்தபோதும் யாரும் அதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

இறுதியில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன் கூட்டத்திற்கு வந்தீர்களா? சாப்பிட வந்தீங்களா? என எரிச்சலாக மைக்கில் பேசினார்.

குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்து கூட்டத்தில் பேசி இருக்கலாம் பசியோடு எவ்வளவு நேரம் நாங்கள் காத்திருப்போம் என அதிமுக பூத் கமிட்டி ஏஜெண்டுகள் புலம்பி கொண்டே சென்றனர்.

``காதல் திருமணம் - பாஜக அலுவலகத்துக்கும் வரலாம்; பெற்றோரிடம், இன்ஸ்பெக்டரிடம் சொல்வோம்'' - அண்ணாமலை

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற தமிழக அரசை வலியுறுத்தி நடந்த கருத்தரங்கில் பேசிய மார்கிஸ்ட் கம்பூனிஸ்ட் கட்சியின் தலைவர் பெ.சண்முகம், கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்தி வை... மேலும் பார்க்க

ஐயப்பன் மாநாடு, ஸ்டாலினுக்கு அழைப்பு: "இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாகும்..." - தமிழிசை காட்டம்!

கேரளாவில் நடைபெறும் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைத்தது, பேசுபொருளாகியிருக்கிறது. "மு.க.ஸ்டாலினும் அவரது மகனும் இந்து நம்பிக்கைகளை அவதூறு செய்தனர். இப்போது தே... மேலும் பார்க்க

தமிழிசை: "ஆணவக்கொலைகளைத் தடுக்க துப்பில்லை; ராமன் காரணமாம்..." - வன்னியரசுக்கு கண்டனம்!

நேற்றைய தினம் (ஆகஸ்ட் 24) சென்னை கவிக்கோ மன்றத்தில் தமிழ்நாடு அரசு ஆணவக்கொலைகளைத் தடுத்து நிறுத்த தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி நடந்த கருத்தரங்கில் விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு ஆற்றிய உரை பேச... மேலும் பார்க்க

நடிகை பாலியல் குற்றச்சாட்டு எதிரொலி; காங்கிரஸிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாலக்காடு எம்.எல்.ஏ!

கேரள மாநிலம், பாலக்காடு சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ராகுல் மாங்கூட்டத்தில். இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த அவர் மீது நடிகை ரினி ஆன் ஜார்ஜ், ஒரு இளம்பெண், திருநங்கை என வரிசையாக பாலியல் தொல்லை புகார... மேலும் பார்க்க

'நக்சல்களுக்கு உதவியவர்' - சுதர்ஷன் ரெட்டியை விமர்சனம் செய்த அமித் ஷா; கிளம்பிய எதிர்ப்பு!

தமிழ்நாட்டை இன்னும் பாஜக-வால் பிடிக்க முடியவில்லை என்பது அந்தக் கட்சியினருக்கு பெரும் கவலை. அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் தான், திடீரென்று கடந்த ஜூலை மாதம் 21... மேலும் பார்க்க

Iran: ``அடிபணிய வைக்க முயற்சிக்கிறது... பெரிய அவமானம்" - அயதுல்லா கமேனி சொல்வதென்ன?

ஈரான் அணுசக்தி விவகாரம்2015-ல், ஈரான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் (பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி) அமெரிக்கா இணைந்து ஓர் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன் மூலம் ஈரான் தனது அணுசக்தி செறிவூட்டலை கு... மேலும் பார்க்க