செய்திகள் :

GRT: தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு 1 கோடி ரூபாய் வழங்கிய ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ்

post image

இந்தியாவின் முன்னணி நகை நிறுவனங்களில் ஒன்றான ஜிஆர்டி Jewellers தங்கள் வணிக ரீதியான வளர்ச்சியையும் தாண்டி, இந்த சமூகத்திற்கு தாங்கள் அளிக்கும் பங்களிப்பு மற்றும் தாக்கத்தை மதிப்பிட வேண்டும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது.

சமூகத்திற்கு திரும்ப கொடுப்பது மற்றும் பல வழிகளில் சேவை செய்வது என்பது நீண்ட காலமாக ஜிஆர்டி Jewelers நிறுவனத்தின் அடிப்படை நோக்கத்தின் அங்கமாகும். வளம் என்பது மக்களை மேம்படுத்துவதற்கான கடமையைக் கொண்டுள்ளது என்று இந்நிறுவனம் நம்புகிறது, மேலும், நீடித்த சமூக முயற்சிகள் மூலம் அந்த நம்பிக்கையை அதன் இதயத்திற்கு நெருக்கமாகக் கொண்டுள்ளது.

ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ்
ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ்

ஜி.ஆர்.டி. Jewellers நிறுவனத்தின் அத்தகைய ஒரு மதிப்புமிக்க CSR முயற்சி, சமீபத்தில் ரூ.1 கோடி அளவில் தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி அறக்கட்டளை (Tamilnac Kidney Research Foundation)-க்கு நன்கொடையாக வழங்கப்பட்டதின் மூலம் வெளிப்பட்டது.

இந்த நன்கொடை, டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான நிதி உதவி. மருந்துகள் மற்றும் பின்தங்கிய சிறுநீரக நோயாளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் உள்ளிட்ட இலவச அல்லது மானிய விலையில் வழங்க உதவும். இந்த விழாவில், ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு G.R. 'ஆனந்த்' அனந்தபத்மநாபன் அவர்கள் கூறுகையில், 'ஜி.ஆர்.டி-யில், எங்களின் வெற்றி என்பது அது பகிர்ந்துகொள்ளப்படும் போது மட்டுமே அரத்தமுள்ளதாகும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த நன்கொடை எங்களைப் பல ஆண்டுகாலங்களாக நம்பிய மற்றும் ஆதரித்த சமூகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் எங்களின் வழி ஆகும். எங்கள் பாரம்பரியம் நாங்கள் உருவாக்கும் நகைகள் மட்டுமல்ல. நாங்கள் தொடும் வாழ்க்கைகளையும் பற்றியது" என்றார்.

மேலும் இது குறித்து ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் மற்றொரு நிர்வாக இயக்குநர் திரு ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், 'எங்களைப் பொறுத்தவரை, வணிகமும் சமூகமும் பிரிக்க முடியாதவை. சமூகத்திற்குத் திரும்ப கொடுப்பது என்பது ஒரு தொண்டு. இது ஒரு பரிசளிப்பு செயல் அல்ல, மாறாக நாங்கள் நன்றியுடன் ஏற்கும் ஒரு கடமையாகும். இந்த நன்கொடை உண்மையான சிரமங்களை குறைக்கும் ஒரு படியாகும் மேலும் இதுபோன்ற வேலையைச் சாத்தியமாக்கும் எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் டீலர்களுக்கும் நாங்கள் நன்றி தெரிவிக்கின்றோம்.

ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ்
ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ்

1964-ல் நிறுவப்பட்ட ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், அதன் ஒரு சாதாரண தொடக்கத்திலிருந்து இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் நகை நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. அதன் வடிவமைப்பு சிறப்பம்சம், கைவினை கலை மற்றும் தலைமுறை தலைமுறைகளாக பெற்ற நம்பிக்கை ஆகியவற்றால் போற்றப்படுகிறது. தங்கம், வைரம் பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினக் கட்டிகளில் நேர்த்தியானக் கலெக்ஷன்களை வழங்கும் இந்நிறுவனம், கலைத்திறனை உண்மைத்தன்மையுடன் இணைத்து ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியடையச் செய்கிறது.

அறுபது ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன் தென்னிந்தியா முழுவதும் மற்றும் சிங்கப்பூரில் ஒரு கிளையுடன் மொத்தம் 66 ஷோரூம்களுடன், ஜி.ஆர்.டி தனது வளர்ச்சியை சேவை செய்யும் சமூகங்களுக்கு ஆழ்ந்த பொறுப்புணர்வுடன் தொடர்ந்து சீரமைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

9K Gold: பிரபலமாகும் 9K தங்க நகைகள்; 22K தங்கத்திற்கு மாற்றா? விலை, தரத்தில் என்ன வித்தியாசம்?

கடந்த சில மாதங்களாக தங்க விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. அமெரிக்கா தங்க கட்டிகளுக்குச் சுங்கவரி விதித்தது இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இதனால் தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்கள் சிரம... மேலும் பார்க்க

Adani: இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி; இரண்டாவது அதானி; இவர்களின் சொத்து எவ்வளவு?

இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரர் யார் என்பதில் முகேஷ் அம்பானிக்கும், அதானிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.முகேஷ் அம்பானி ஆயில், மொபைல், சில்லறை வர்த்தகம் போன்றவற்றில் கொடி கட்டி பறக்கிறார். அதானி... மேலும் பார்க்க

நீலகிரி: `மாதச் சந்தை-ன்னா அரவங்காடு தான்..!' - 8th Day மார்க்கெட் ரவுண்ட் அப்!

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் அரவங்காடு பகுதியில் மாதம் 8 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும் பல ஊர்களில் இருந்து பொதுமக்களும் வருகின்றனர்.அந்த ஒரு நாள் நடக்கும் சந்தையில... மேலும் பார்க்க

உலக அளவில் லித்தியம் விலை 4% உயர்வு; இதற்கு காரணம் சீனா! - இது இந்தியாவை எப்படி பாதிக்கும்?

உலகளாவிய சந்தையில் தற்போது லித்தியத்தின் விலை மிகவும் உயர்ந்துள்ளது. இதற்கு என்ன காரணம், இது இந்தியாவை எப்படி பாதிக்கும் என்பதை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்."சர்வதேச சந்தையில் லித்திய... மேலும் பார்க்க

ட்ரம்ப் விதித்த 50% வரி: என்னென்ன ஏற்றுமதிகளைப் பாதிக்கும்? | முழு விவரம்

உலக நாடுகளின் தற்போதைய ஹாட் டாப்பிக், 'அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், அவர் விதித்துள்ள வரியும் தான்'. அமெரிக்கா மீது பிற நாடுகள் அதிக வரி விதிக்கின்றன... அமெரிக்காவிற்கு பிற நாடுகளுடன் வர்த்தகப் பற்றாக்... மேலும் பார்க்க