செய்திகள் :

நீலகிரி: `மாதச் சந்தை-ன்னா அரவங்காடு தான்..!' - 8th Day மார்க்கெட் ரவுண்ட் அப்!

post image

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் அரவங்காடு பகுதியில் மாதம் 8 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும் பல ஊர்களில் இருந்து பொதுமக்களும் வருகின்றனர்.

அந்த ஒரு நாள் நடக்கும் சந்தையில் குறைந்த விலையில் தரமான பல பொருள்கள் கிடைக்கும் காரணத்தால் பல ஊரில் இருந்து மக்கள் இச்சந்தைக்கு வருகை தர ஆர்வம் காட்டுகின்றனர்.

புகழ்பெற்ற இந்தச் சந்தை எதற்காக ஒரு நாள் மட்டும் நடக்கிறது ? குறிப்பாக 8 ஆம் தேதி மட்டும் ஏன் நடக்கிறது ? எந்தெந்த ஊரில் இருந்து வியாபாரிகள் வருகின்றனர்? சந்தையின் நிறை குறைகள் என்ன என்று அங்கிருக்கும் வியாபாரிகளிடம் இருந்து தெரிந்து கொள்வோம் !

8 ஆம் தேதி மட்டும் வியாபாரிகள் வருவதற்கான காரணம் "எஸ்டேட் விடுமுறை " மற்றும் வெடி மருந்து தொழிற்சாலையின் "சம்பள நாள்."

ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து பயிற்சி பெற வரும் ராணுவப் படை வீரர்கள் மற்றும் வெடி மருந்து தொழிற்சாலைக்கு பணிபுரிய வரும் தொழிலாளர்களுக்கு 7 ஆம் தேதி சம்பளம் நாள் மற்றும் மறுநாள் 8 ஆம் தேதி விடுமுறை என்பதால், இச்சந்தை 8 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் நடைபெறுகிறது.

பல பகுதிகளில் இருந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு பல மாவட்டங்களில் இருந்து குறிப்பாக கோவை, திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல் என பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் பொருள்களை விற்பதற்காக வருகின்றனர். மாதம் ஒரு நாள் மட்டும் நடக்கும் இச்சந்தை ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்கள் மட்டும் அதிக வியாபாரம் ஆகும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

பயிற்சி பெற வரும் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி முடியும் காலம் என்பதால் ஊர் திரும்பும் முன் 8-ம் தேதி அன்று, ஏற்றுமதி தரத்திலான பொருட்களை குறைந்த விலையில் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

பல வியாபாரிகள் சின்ன சின்ன அடிப்படை தேவைகளை கோரிக்கையாக வைத்தனர். குடிநீர் வசதி, கழிவறை வசதி, தெருவிளக்குகள் என அங்கு வந்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் நகராட்சிக்கு கோரிக்கை வைத்தனர். பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும், பல ஊர்களில் இருந்து பொதுமக்களும் வருவதால், இந்தச் சின்ன சின்ன தேவைகளைப் பூர்த்தி செய்தால், சிரமமின்றி வியாபாரம் செய்ய ஏதுவாக இருக்கும் என்கின்றனர்.

ஒரு நாள் நடக்கும் சந்தையாக இருந்தாலும், அங்கிருக்கும் பொருள்கள் தரமானதாகவும் விலை குறைவாகவும் உள்ளது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

உலக அளவில் லித்தியம் விலை 4% உயர்வு; இதற்கு காரணம் சீனா! - இது இந்தியாவை எப்படி பாதிக்கும்?

உலகளாவிய சந்தையில் தற்போது லித்தியத்தின் விலை மிகவும் உயர்ந்துள்ளது. இதற்கு என்ன காரணம், இது இந்தியாவை எப்படி பாதிக்கும் என்பதை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்."சர்வதேச சந்தையில் லித்திய... மேலும் பார்க்க

ட்ரம்ப் விதித்த 50% வரி: என்னென்ன ஏற்றுமதிகளைப் பாதிக்கும்? | முழு விவரம்

உலக நாடுகளின் தற்போதைய ஹாட் டாப்பிக், 'அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், அவர் விதித்துள்ள வரியும் தான்'. அமெரிக்கா மீது பிற நாடுகள் அதிக வரி விதிக்கின்றன... அமெரிக்காவிற்கு பிற நாடுகளுடன் வர்த்தகப் பற்றாக்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த வின்பாஸ்ட் மின்சார கார் உற்பத்தி ஆலை | Photo Album

தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த வின்பாஸ்ட் மின்சார கார் உற்பத்தி ஆலை.! எக்ஸ்க்ளூசிவ் படங்கள்.! மேலும் பார்க்க

"இந்தியாவின் மின் வாகன உற்பத்தியின் தலைநகரம் தமிழ்நாடு" - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

தூத்துக்குடியில் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் மின் வாகன உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இத்தொழிற்சாலையில் விற்பனைக்கான முதல் காரில் கையெழுத்திட்டார். தொடர்ந்து விழா... மேலும் பார்க்க

Joyalukkas: 'தங்க மகன் ஜாய்' - டாக்டர்.ஜோய் ஆலுக்காஸ் அவர்களின் சுயமரியாதை தமிழ் பதிப்பு அறிமுகம்

சர்வதேச வியாபாரத்தின் அடையாளம், ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் டாக்டர், ஜோய் ஆலுக்காஸ், தனது சுயசரிதையான ஸ்ப்ரெடிங் ஜோய்-ன் தமிழ் பதிப்பை "தங்க மகள் ஜோய்" என்ற தலைப்பில் வெளியீட்டார். ஐ.டி.சி கிராண... மேலும் பார்க்க

GRT: தொடர்ந்து ஒன்பதாவது முறையாக பிளாட்டினம் விருதை வெல்லும் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்!

1964 ஆம் ஆண்டு எளிமையான ஆரம்பத்துடன் நிறுவப்பட்ட ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், சிறந்த கலைத்திறன், நேர்த்தியான கைவினைகலைஞர்களின் படைப்புகள், மற்றும் நிலையான வாடிக்கையாளர்களின் நம்பிக்கை காரணமாக இந்தியாவின் நம்பக... மேலும் பார்க்க