செய்திகள் :

தமிழிசை: "ஆணவக்கொலைகளைத் தடுக்க துப்பில்லை; ராமன் காரணமாம்..." - வன்னியரசுக்கு கண்டனம்!

post image

நேற்றைய தினம் (ஆகஸ்ட் 24) சென்னை கவிக்கோ மன்றத்தில் தமிழ்நாடு அரசு ஆணவக்கொலைகளைத் தடுத்து நிறுத்த தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி நடந்த கருத்தரங்கில் விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு ஆற்றிய உரை பேசுபொருளாகியிருக்கிறது.

வன்னியரசுக்கு கண்டனம் தெரிவித்த தமிழிசை சௌந்தரராஜன், "வன்னி அரசு பேச்சுக்கு என் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். இந்து தர்மத்தைப் போற்றும், தீவிரமாக பின்பற்றும் பக்தர்களில் ஒருவராக கண்டிக்கிறேன்.

ராமன் - சீதை

நான் அதற்காக மற்ற மதங்களை தாழ்வாக கருதியதில்லை. ராமன் ஏதோ ஒரு பிராமணருக்காக பழங்குடியைக் கொன்றாராம். இவர் பக்கத்தில் இருந்து பார்த்தது போல பேசியிருக்கிறார்." என்றார்.

சமூகநீதி காத்த ராமன்!

மேலும், "ராமர் பழங்குடி பெண் சபரி கொடுத்த பழத்தை வாங்கி சாப்பிட்டார். வானர இயக்கத்தைச் சேர்ந்த அனுமன் உடன் நின்றார். விபீஷணனுக்கு உதவி செய்தார். நீங்கள் என்ன பேசுகிறீர்கள்? சமதர்ம தர்மத்தை உடையவர், சமூக நீதியைக் காத்தவர் ராமர்.

ஆணவக்கொலைகளைத் தடுக்க துப்பில்லை ஸ்டாலின் அரசுக்கு. ஆணவக்கொலைக்கு காரணம் சனாதன தர்மமாம், ராமனாம்." எனக் காட்டமாகப் பேசினார்.

வன்னியரசு

ஏன் தனிச்சட்டம் கொண்டுவரவில்லை?

அத்துடன், "உங்கள் ஆட்சி ஏன் ஆணவக்கொலைக்கு தனிச்சட்டம் கொண்டுவர முடியவில்லை. ராஜஸ்தானில் சிறப்பு சட்டம் உள்ளது. உ.பி, ஹரியானாவில் சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க சட்டம் உள்ளது.

நீங்கள் ஆளுகின்ற மாநிலத்தில் இளைஞர்கள் கொலை செய்யப்படுகின்றனர். அதைப் போய் பார்க்கக்கூட உங்களுக்கு முடியாது. ஆனால் ஆணவக்கொலைக்கு இராமன், இந்து தர்மம் காரணம் என என்ன ஆணவத்தோடு பேசுகிறீர்கள்?

ராமனைக் கும்பிடுபவர்கள், இந்து தர்மத்தைப் போற்றுகிறவர்களின் ஒரு ஓட்டு கூட இண்டி கூட்டணிக்கு விழக் கூடாது.

முதலில் ஆணவக்கொலையைத் தடுக்க ஸ்டாலினிடம் போராட்டம் நடத்துங்கள். கூட்டணிக்காக கூழை கும்பிடு போட்டு உட்காந்திருக்காதீர்கள். ஆணவக்கொலைக்கு மாநில அரசின் அஜாக்கரதையும், சட்ட ஒழுங்கும், ஸ்டாலின் ஆட்சியும்தான் காரணம். ஆணவக்கொலையைத் தடுக்க துப்பில்லாமல், அந்த ரத்தத்தில் ஆட்சி நடத்திக்கொண்டு ராமனை நிந்திக்கிறார்கள்." எனக் கண்டித்தார்.

``கூட்டத்துக்கு வந்தீங்களா, சாப்பிட வந்தீங்களா?'' - முன்னாள் அமைச்சரின் எரிச்சல் பேச்சு

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஏஜெண்டுகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கலந்து... மேலும் பார்க்க

``காதல் திருமணம் - பாஜக அலுவலகத்துக்கும் வரலாம்; பெற்றோரிடம், இன்ஸ்பெக்டரிடம் சொல்வோம்'' - அண்ணாமலை

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற தமிழக அரசை வலியுறுத்தி நடந்த கருத்தரங்கில் பேசிய மார்கிஸ்ட் கம்பூனிஸ்ட் கட்சியின் தலைவர் பெ.சண்முகம், கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்தி வை... மேலும் பார்க்க

ஐயப்பன் மாநாடு, ஸ்டாலினுக்கு அழைப்பு: "இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாகும்..." - தமிழிசை காட்டம்!

கேரளாவில் நடைபெறும் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைத்தது, பேசுபொருளாகியிருக்கிறது. "மு.க.ஸ்டாலினும் அவரது மகனும் இந்து நம்பிக்கைகளை அவதூறு செய்தனர். இப்போது தே... மேலும் பார்க்க

நடிகை பாலியல் குற்றச்சாட்டு எதிரொலி; காங்கிரஸிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாலக்காடு எம்.எல்.ஏ!

கேரள மாநிலம், பாலக்காடு சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ராகுல் மாங்கூட்டத்தில். இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த அவர் மீது நடிகை ரினி ஆன் ஜார்ஜ், ஒரு இளம்பெண், திருநங்கை என வரிசையாக பாலியல் தொல்லை புகார... மேலும் பார்க்க

'நக்சல்களுக்கு உதவியவர்' - சுதர்ஷன் ரெட்டியை விமர்சனம் செய்த அமித் ஷா; கிளம்பிய எதிர்ப்பு!

தமிழ்நாட்டை இன்னும் பாஜக-வால் பிடிக்க முடியவில்லை என்பது அந்தக் கட்சியினருக்கு பெரும் கவலை. அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் தான், திடீரென்று கடந்த ஜூலை மாதம் 21... மேலும் பார்க்க

Iran: ``அடிபணிய வைக்க முயற்சிக்கிறது... பெரிய அவமானம்" - அயதுல்லா கமேனி சொல்வதென்ன?

ஈரான் அணுசக்தி விவகாரம்2015-ல், ஈரான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் (பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி) அமெரிக்கா இணைந்து ஓர் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன் மூலம் ஈரான் தனது அணுசக்தி செறிவூட்டலை கு... மேலும் பார்க்க