டைனோசார் கால புதைபடிமம் ராஜஸ்தானில் கண்டுபிடிப்பு! இங்கிலாந்துக்குப் பின் இந்தியாவில்...
டைனோசார் கால புதைபடிமம் ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் சிறப்பம்சம் என்னவென்றால், இங்கிலாந்துக்குப் பின் இந்தியாவில்தான், இத்தகைய பழங்கால புதைபடிமம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
ராஜஸ்தானின் ஜய்சல்மேரில் மண்ணுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தப் புதைபடிமம், சுமார் 201 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த டைனோசார் காலத்தைச் சார்ந்ததாக ஆராய்ச்சியாளர்களால் குறிப்பிடப்படுகிறது. அந்தப் புதைபடிமம், ஒரு முதலையின் வடிவமைப்பை ஒத்துப்போகிறதெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.