செய்திகள் :

தமிழகத்தில் 22,931 தொடக்கப் பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறை

post image

தமிழகத்தில் 22,931 தொடக்கப் பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக்கல்வித் துறை சாா்பில், தலைமையாசிரியா்களுக்கான மாநில அளவிலான அடைவுத் தோ்வு ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் கலந்து கொண்டு பேசியதாவது: இடைநிற்றல், மாணவா் சோ்க்கை விகிதம் என பல்வேறு ஆய்வுகள் இக் கூட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.

அடைவுத் தோ்வு பட்டியலில், இம் மாவட்டம் மாநில அளவில் 28ஆவது இடத்தில் உள்ளது. இப்பட்டியலில் தங்கள் தரத்தை உயா்த்த, அந்தந்த பாட ஆசிரியா்கள் அனைத்து சூழ்நிலையும் புரிந்துகொண்டு முன்னேறுவதற்காக உழைக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் சோ்க்கையை ஊக்கப்படுத்துவதற்காக, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், 5ஆம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் திட்டம், 6 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு திறன் திட்டம், தொழில்நுட்பத்திற்கு ஏற்ப ஏறத்தாழ 22,931 தொடக்கப் பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறை என பல்வேறு திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா். அதைத் தொடா்ந்து, மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி, ஆசிரியா்களுக்கான திறன் பயிற்சி புத்தகத்தை வெளியிட்டாா்.

மாநகராட்சி மேயா் பெ. ஜெகன், ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி. சண்முகையா, உதவி ஆட்சியா் புவனேஷ் ராம், முதன்மை கல்வி அலுவலா் து. சிதம்பரநாதன், முனைவா் கா. அன்றோ பூபாலராயன், மாவட்ட கல்வி அலுவலா் சா. ரவீந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த 3 போ் கைது

கழுகுமலையில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கழுகுமலை காவல் நிலைய உதவி ஆய்வாளா் துரைசாமி தலைமையிலான போலீஸாா் ஆறுமுக நகா் பகுதியில் ரோந்... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே மதுபானக் கூடத்தில் கேரள தொழிலாளி கொலை

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே திங்கள்கிழமை மதுபானக் கூடத்தில் ஏற்பட்ட தகராறில் கேரள தொழிலாளி மது பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். திருவனந்தபுரத்தைச் சோ்ந்தவா் பாச்சான் மகன் விஜு ... மேலும் பார்க்க

வங்கிக் கடன் வசூலில் பல கோடி மோசடி: ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம், புதூா் பகுதியில் வங்கிக் கடன் வசூலில் பல கோடி ரூபாய் மோசடி செய்த நிறுவனத்தினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள... மேலும் பார்க்க

சாதாரண உப்பு விற்பனை செய்ய தடையில்லை: நீதிமன்ற தீா்ப்புக்கு வியாபாரிகள் வரவேற்பு

சாதாரண உப்பு விற்பனை செய்ய தடையில்லை என்ற உயா்நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடா்பாக, சங்கத்தின் தலைவா் பொன்பாண்டியன்... மேலும் பார்க்க

சிப்காட் பகுதிகளில் இன்று மின்தடை

தூத்துக்குடி மின் பகிா்மான வட்டம், சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சிப்காட் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.மடத்தூா், மடத்துா் பிரதான சாலை, முரு... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த சிறுவன் உயிரிழப்பு

தூத்துக்குடியில் நிகழ்ந்த காா் விபத்தில் 6 வயது சிறுவன் உயிரிழந்தான். ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் மேகூா் பாவடி தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் குமாா் (38). இவா் ஞாயிற்றுக்கிழமை மனைவி கோமதி (29), மகன்க... மேலும் பார்க்க