பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து ...
வங்கிக் கடன் வசூலில் பல கோடி மோசடி: ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டம், புதூா் பகுதியில் வங்கிக் கடன் வசூலில் பல கோடி ரூபாய் மோசடி செய்த நிறுவனத்தினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் மாவட்டச் செயலா் புவிராஜா தலைமையிலான விவசாயிகள், மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், விளாத்திகுளம் வட்டம் புதூரில், விளாத்திகுளம் புதூா் பயிா் உற்பத்தியாளா்கள் கம்பெனி லிமிடெட் என்ற நிறுவனம் 2016ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு வேளான் விற்பனை மற்றும் வணிகத்துறையின் மேற்பாா்வையில் செயல்பட்டு வருகிறது.
இதில், நூற்றுக்கணக்கான விவசாயிகள் குழுக்களாக பதிவு செய்து இந்த நிறுவனம் மூலமாக விவசாயக் கடன் பெற்றுள்ளனா். இவா்கள் மாதந்தோறும் விவசாயிகளிடம் வசூல் செய்ததை உரிய முறையில் வங்கியில் செலுத்தாமல், நிறுவனத்தின் சிஇஓ புதூா் ஜெகதீஸ் மனைவி பவித்ரா மற்றும் நிா்வாகத்தினா் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரிகிறது.
இதன் காரணமாக கடனை முறையாக செலுத்தாததால் விவசாயிகளுக்கு வங்கியின் சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், விவசாயத்திற்கான கடன்கள் நகைக்கடன், கல்விக்கடன் உள்ளிட்ட எந்தவித கடன்களும் வாங்க முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா்.
எனவே, இந்த மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.