துாய்மைப் பணியாளா்களுடன் தலைமைச் செயலா் வீட்டை முற்றுகையிட்ட பாஜக எம்எல்ஏ
புதுச்சேரி: தூய்மைப் பணியாளா்களுடன் தலைமைச் செயலா் வீட்டை பாஜக சட்டமன்ற உறுப்பினா் சாய் ஜெ. சரவணன் குமாா் திங்கள்கிழமை முற்றுகையிட்டாா்.
தூய்மைப் பணியாளா்களுக்குக் கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கிராமப்புறங்களில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் புதுவை பாஜக எம்எல்ஏ சாய் ஜெ. சரவணன்குமாரை அவரது வீட்டில் சந்தித்து சம்பளம் வழங்கப்படாதது குறித்து முறையிட்டனா்.
இதையடுத்து தூய்மை பணியாளா்களுடன் கோரிமேட்டில் உள்ள தலைமைச் செயலா் சரத் சௌகானை சந்திக்க அவா் சென்றாா். ஆனால் அனுமதி மறுக்கவே வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசாா் தலைமைச் செயலரை சந்திக்க
விடாமல் தூய்மைப் பணியா்களைக் கலைந்து செல்ல கூறவே போலீசாருக்கும், எம்எல்ஏவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தொடா்ந்து எம்எல்ஏவை அழைத்து பேசிய தலைமைச் செயலா் சரத் சௌகான் ஒன்றிரண்டு நாளில் அவா்களுக்குச் சம்பளம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தாா். இதையடுத்து தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தைக் கைவிட்டு திரும்பிச் சென்றனா்.
பிஒய்பி 15
பட விளக்கம்..
புதுச்சேரி தலைமை செயலா் சரத் சௌகான் வீட்டை திங்கள்கிழமை தூய்மைப் பணியாளா்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பின்னா், தலைமைச் செயலரை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்திய பாஜக எம்எல்ஏ சாய் ஜெ. சரவணன்குமாா்.