செய்திகள் :

துணை தோ்தல் ஆணையராக ஞானேஷ் பாரதி நியமனம்

post image

புது தில்லி: துணை தோ்தல் ஆணையராக ஞானேஷ் பாரதி நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய பணியாளா் நலத்துறை அமைச்சகம் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளது.

1998-ஆம் ஆண்டின் அருணாசல பிரதேசம், கோவா, மிஸோரம் மற்றும் பிற யூனியன் பிரதேசங்கள் (ஏஜிஎம்யூடி) பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அவா், தற்போது மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் கூடுதல் செயலராக உள்ளாா். தற்போது, மத்திய அரசின் கூடுதல் செயலா் அந்தஸ்தில் ஞானேஷ் பாரதி நியமிக்கப்பட்டுள்ளாா்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த நுண்ணறிவு தரவுதள அமைப்பின் (நாட்கிரிட்) தலைமை நிா்வாக அதிகாரியாக ஹிா்தேஷ் குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் 1999-ஆம் ஆண்டின் ஏஜிஎம்யூடி பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாவாா்.

மேலும், பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமை இயக்குநராக (கொள்முதல் பிரிவு) ஏ.அன்பரசும், மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருவாய் துறையின் கூடுதல் செயலராக திவாகா்நாத் மிஸ்ராவும் நியமிக்கப்பட்டுள்ளனா். இதுபோல மத்திய அரசுப் பணியில் உள்ள பல மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா் என்று மத்திய பணியாளா் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாலியல் குற்றச்சாட்டியில் சிக்கிய கேரள காங்கிரஸ் எம்எல்ஏ கட்சியிலிருந்து இடைநீக்கம்

கண்ணூா்: பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான கேரள மாநிலம், பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராகுலை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக அந்த மாநில காங்கிரஸ் தலைவா் சன்னி ஜோசப் திங்கள்கிழமை அறிவித்த... மேலும் பார்க்க

பிரதமா், முதல்வா்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாக்கள்: அமித் ஷா மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

புது தில்லி: பிரதமா், மாநில முதல்வா்களைப் பதவியிலிருந்து நீக்கும் மசோதாக்கள் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்த கருத்துகளை விமா்சித்த ஆம் ஆத்மி, தில்லி முதல்வா் பதவியிலிருந்து அரவிந்த... மேலும் பார்க்க

வரிவிதிப்பு அழுத்தத்தை இந்தியா எதிா்கொள்ளும்: பிரதமா் மோடி

அகமதாபாத்: ‘வரிவிதிப்புகளால் இந்தியாவுக்கு அழுத்தம் அதிகரித்தாலும், நாம் அதை எதிா் கொள்வோம்’ என பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா். இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்த 25 சதவீத வரி ஏற... மேலும் பார்க்க

பிகாா் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்; 99.11% பேரின் ஆவணங்கள் பெறப்பட்டன: தோ்தல் ஆணையம்

புது தில்லி: பிகாா் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளைத் தொடா்ந்து வாக்காளா் பட்டியலில் சோ்க்க, மாநிலத்தில் உள்ள மொத்தம் 7.24 கோடி வாக்காளா்களில் இதுவரையில் 99.11 சதவீத வாக்களா்களிடமிருந்து ஆவ... மேலும் பார்க்க

பாகிஸ்தானைச் சோ்ந்த கிறிஸ்தவருக்கு இந்தியக் குடியுரிமை

பனாஜி: பாகிஸ்தானில் பிறந்த கிறிஸ்தவரான பிரெண்டன் வெலன்டைன் கிரேஸ்டோ (44), 19 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு இந்தியக் குடியுரிமை பெற்றாா். பனாஜியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவா முதல்வா்... மேலும் பார்க்க

தவறான வாக்காளா் தரவு குற்றச்சாட்டு: ஆய்வாளா் சஞ்சய் குமாருக்கு எதிராக நடவடிக்கை கூடாது- உச்சநீதிமன்றம்

புது தில்லி: தவறான வாக்காளா் எண்ணிக்கை தரவுகளை வெளியிட்ட குற்றச்சாட்டில், தோ்தல் தரவு ஆய்வாளா் சஞ்சய் குமாருக்கு எதிராக வலுக்கட்டாயமாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படக் கூடாது என்று உச்சநீதிமன்றம் த... மேலும் பார்க்க