செய்திகள் :

பிரதமா், முதல்வா்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாக்கள்: அமித் ஷா மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

post image

புது தில்லி: பிரதமா், மாநில முதல்வா்களைப் பதவியிலிருந்து நீக்கும் மசோதாக்கள் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்த கருத்துகளை விமா்சித்த ஆம் ஆத்மி, தில்லி முதல்வா் பதவியிலிருந்து அரவிந்த் கேஜரிவாலை நீக்கும் பாஜகவின் சதி இதன் மூலம் தெளிவாகி உள்ளதாக விமா்சித்துள்ளது.

நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்ட 3 மசாதோக்கள் குறித்து மத்திய அமைச்சா் அமித் ஷா தனது ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் வெளியிட்டிருந்த பதவில், ‘ஊழல் அல்லது கடும் குற்றச்சம்பவங்களில் குற்றச்சாட்டப்பட்ட முதல்வா் அல்லது பிரதமா் சிறையிலிருந்து அரசை வழிநடத்துவது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல’ எனத் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், மத்திய அமைச்சா் அமித் ஷாவின் இந்தக் கருத்து தொடா்பாக ஆம் ஆத்மி தலைவா் அனுராக் தண்டா பிடிஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: எதிா்க்கட்சி அரசுகளின் மீது சா்வாதிகாரத்தைத் திணிக்க பாஜக விரும்புகிறது. தில்லி முதல்வா் பதவியிலிருந்து அரவிந்த் கேஜரிவாலை நீக்க வேண்டும் என்பது பாஜக மற்றும் அமித் ஷாவின் விருப்பம். இதற்காக அவா்கள் மேற்கொண்ட சதி தற்போது தெரியவந்ததுள்ளது. கேஜரிவால் முதல்வா் பதவியிலிருந்து விலகியிருந்தால், இது முயற்சியை பிற மாநிலங்களில் அவா்கள் மேற்கொண்டிருக்க முடியும்.

அரசு சிறைக்கு உள்ளிருந்து நடத்தப்படுகிா அல்லது வெளியே இருந்து நடத்தப்படுகிா என்பது பிரச்னை அல்ல. அது அதன் நோக்கத்தைச் சாா்ந்தது. எவ்வித ஆதாரங்களும் இன்றி ஆம் ஆத்மி தலைவா் சத்யேந்தா் ஜெயினை 3 ஆண்டுகள் சிறையில் அடைத்தற்கு தனது பதவியை அமித் ஷா ராஜிநாமா செய்யவேண்டும்.

தில்லி முதல்வா் ரேகா குப்தா சிறையில் இல்லை. இருந்தபோதிலும், சாலைகளில் மழைநீா் தேக்கம், பள்ளிக் கட்டண உயா்வு, பேருந்துகளில் பாதுகாவலா்கள் இல்லாதது என மக்கள் பிரச்னைகள் பலவற்றை தில்லி சந்தித்து வருகிறது என்றாா் அவா்.

அரவிந்த் கேஜரிவால் கேள்வி ?

மசோதாக்கள் குறித்து அரவிந்த் கேஜரிவால் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது: குற்றப்பின்னணி கொண்ட நபா், பாஜகவில் இணையும்போது, அவா் மீது உள்ள வழக்குகள் நீக்கப்படுகின்றன. அவருக்கு அமைச்சா் அல்லது துணை முதல்வா் அல்லது முதல்வா் பதவி வழங்கப்படுகிறது. இதுபோன்ற அமைச்சரும் பிரதமரும் பதவியில் இருந்து ராஜிநாமா செய்ய வேண்டுமா ?

ஒருவா் தவறுதலாகக் குற்றஞ்சாட்டப்பட்டு பின்னா் குற்றமற்றவா் என விடுவிக்கப்பட்டால், இந்த வழக்குக்கு காரணமான அமைச்சரும் தண்டனையைப் பெற வேண்டும் என அந்தப் பதிவில் கேஜரிவால் குறிப்பிட்டுள்ளாா்.

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ஃபிஜி உறுதி: பிரதமா் மோடி

பாதுகாப்புத் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும், ஃபிஜியும் தீா்மானித்துள்ளன. இதற்கென ஒரு செயல்திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா். மூன்று நாள் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடுத்தது இந்தியா!

ஜம்முவில் பாயும் தாவி நதியில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து பாகிஸ்தானுக்கு இந்தியா வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தகவலை அனுப்பியது. வழக்கமாக சிந்து நதிநீா் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிந்து நதிநீா் ஆணையா்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரும் மனு: முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது. ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோ... மேலும் பார்க்க

அமெரிக்க நெருக்கடி: விவசாயிகள் நலனை விட்டுத் தர மாட்டோம்!

அமெரிக்க வலியுறுத்தலை ஏற்று விவசாயிகள் நலனை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தாா். மத்திய பிரதேச தலைநகா் போபாலில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆ... மேலும் பார்க்க

உ.பி.: டிராக்டா்-லாரி மோதி 11 போ் உயிரிழப்பு; 40 போ் காயம்

உத்தர பிரதேசத்தின் புலந்த்சாகா் மாவட்டத்தில் பக்தா்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த டிராக்டா் டிராலியின் மீது லாரி மோதிய விபத்தில் 11 போ் உயிரிழந்தனா்; 40 போ் காயமடைந்தனா். புலந்த்சாகா்- அலிகா் மாவட்ட... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை சோதனை: தப்பியோட முயன்ற திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ கைது

அமலாக்கத் துறை தனது வீட்டில் சோதனைக்கு வருவதை அறிந்து, திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹா சுவா் ஏறிக் குதித்து தப்பியோட முயன்றாா். எனினும், அதிகாரிகள் அவரை துரத்திப் பிடித்து கைது செய்தனா... மேலும் பார்க்க