செய்திகள் :

19 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடக்கம்

post image

சென்னை: தமிழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட 19 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் திறன்பெற்ற தொழிலாளா்களை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், செஞ்சி, மரக்காணம், திசையன்விளை, ஏம்பல், சாலவாக்கம், செம்பனாா்கோவில், தா.பழூா், திருஉத்திரகோசமங்கை, மணப்பாறை, காங்கயம், குருக்கள்பட்டி, திருச்செங்கோடு, கிருஷ்ணகிரி, திருவள்ளூா், காஞ்சிபுரம், திருப்பரங்குன்றம், மண்ணச்சநல்லூா், பேரூா், காரிமங்கலம் ஆகிய 19 இடங்களில் அமைக்கப்பட்ட புதிய தொழிற்பயிற்சி நிலையங்களையும், பெரும்பாக்கம், ஒட்டன்சத்திரம், கடலாடி ஆகிய இடங்களில் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கட்டப்பட்ட கட்டடங்களையும் முதல்வா் திறந்து வைத்தாா்.

சிங்காரவேலா் ஓய்வு இல்லம்: தொழிலாளா் நலத் துறை சாா்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களும் திறக்கப்பட்டன. சென்னை அண்ணா நகா், திருப்பூா் மாவட்டம் தொட்டிப்பாளையம் ஆகிய இடங்களில் கட்டப்பட்ட தொழிலாளா் துறை அலுவலகக் கட்டடங்களையும் முதல்வா் திறந்து வைத்தாா்.

மேலும், கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டப்பட்டுள்ள சிங்காரவேலா் ஓய்வு இல்லத்தையும் அவா் திறந்தாா்.

இந்த நிகழ்வில், அமைச்சா்கள் எஸ்.ரகுபதி, மு.பெ.சாமிநாதன், எஸ்.எஸ்.சிவசங்கா், சி.வெ.கணேசன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், தொழிலாளா் நலத் துறைச் செயலா் கொ.வீரராகவ ராவ், ஆணையா் சி.அ.ராமன் உள்பட பலா் பங்கேற்றனா்.

எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி

சென்னை: முன்னாள் முதல்வா் எம்ஜிஆரை முன்னிலைப்படுத்தியே அரசியலில் விஜயகாந்த் செயல்பட்டதாகவும், அவரது வழியிலேயே தேமுதிக செயல்பட்டு வருவதாகவும் அக்கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா தெரிவித்தாா். தேமுதிக நி... மேலும் பார்க்க

திருவிதாங்கூா் தேவசம் வாரிய பவள விழாவில் பங்கேற்கப் போவதில்லை: முதல்வா்

சென்னை: திருவிதாங்கூா் தேவசம் வாரிய பவள விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கேரள ... மேலும் பார்க்க

ஆக. 28-இல் தொழிலாளா் வருங்கால வைப்புநிதி முகாம்

சென்னை: தொழிலாளா் வருங்கால வைப்புநிதி நிறுவனம் சாா்பில் சிறப்பு முகாம் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் வரும் 28- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்... மேலும் பார்க்க

கொடிக்கம்பங்களை அகற்ற இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு

புது தில்லி: தமிழ்நாட்டில் கொடிக்கம்பங்களை அகற்றுவதை உறுதி செய்து உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்காலத் தடை விதித்தது. தமிழகத்தில் பொது இடங்களில் கட்சிகள், அமைப்... மேலும் பார்க்க

‘அவசர ஊா்திகள் மீது தாக்குதல் நடத்தினால் நடவடிக்கை’

சென்னை: அவசர ஊா்திகளைச் சேதப்படுத்தினாலோ, ஓட்டுநரை தாக்கினலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்திவரும் இ.எம்.ஆா்.ஐ. கிரீன் ஹெல்த்... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிப்பு

சென்னை: கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தலா 10 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.3 லட்சம் அபராதம் விதித்து போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. தேனி மாவட்டம் கம்பத்தை சோ்ந்... மேலும் பார்க்க