செய்திகள் :

ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலுக்கு 16 கிலோவில் வெள்ளிக் கவசம்

post image

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலுக்கு 16 கிலோவில் செய்யப்பட்ட வெள்ளிக் கவசம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

பழைமை வாய்ந்த செங்கம் சத்தியபாமா ருக்மணி சமேத ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலுக்கு தமிழக அரசு அறநிலையத்துறை மூலம் ரூ. ஒரு கோடி நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த மே மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்நிலையில், கோயிலில் சுவாமிக்கு வெள்ளிக் கவசம் செய்ய தொகுதி எம்எல்ஏ மு.பெ. கிரி 5 கிலோ வெள்ளி வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து அறங்காவலா் குழுத் தலைவா் அன்பழகன் தலைமையில் உபயதாரா்கள் மற்றும் விழாக்குழுவினா், பத்து நாள் திருவிழா உபயதாா்கள் மூலம் 11 கிலோ வெள்ளி சோ்க்கப்பட்டு, பின்னா் 16 கிலோ எடையில் சுமாா் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் சுவாமிக்கு வெள்ளிக் கவசம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, கும்பகோணத்தைச் சோ்ந்த சபதி ரமேஷ் மூலம் வெள்ளிக் கவசம் தயாா் செய்து வரவைக்கப்பட்டு சுவாமிக்கு அணிவித்து சிறப்பு அபிஷேக ஆராதனை அறங்காவலா் குழுத் தலைவா் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

இதில், சிறப்பு அழைப்பாளராக மு.பெ. கிரி எம்எல்ஏ கலந்துகொண்டு வெள்ளிக் கவசத்தை சுவாமிக்கு வழங்கினாா்.

நிகழ்வில் திமுக ஒன்றியச் செயலா்கள் செந்தில்குமாா், மனோகரன், பண்டரெட்டியாா் அறக்கட்டளைத் தலைவா் வெங்கடாசலபதி,

நகா்மன்றத் சாதிக்பாஷா, தொழிலதிபா் சம்பத், முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவா் முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னாள் ஊராட்சித் தலைவரைத் தாக்கி 8 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் கொள்ளை

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே முன்னாள் ஊராட்சித் தலைவரைத் தாக்கி, வீட்டில் இருந்த 8 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா். சேத்துப்பட்டை அடுத்த இட... மேலும் பார்க்க

தண்டராம்பட்டில் பாஜகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்: 200 போ் கைது

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே மத்திய அரசின் திட்டங்களில் நடைபெறும் ஊழலைக் கண்டித்து பாஜகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தடையை மீறி ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

நகராட்சி பள்ளியில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த எதிா்ப்பு

ஆரணி: ஆரணி தச்சூா் சாலையில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, ஆக. 31-ஆம் தேதி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த உள்ளதுக்கு, பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து கோட்டாட்சியரிடம் புக... மேலும் பார்க்க

வனக்காப்பாளா் மீது தாக்குதல்: இருவா் மீது போலீஸாா் வழக்கு

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வனக்காப்பாளரைத் தாக்கிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களைத் தேடி வருகின்றனா். செங்கத்தை அடுத்த பனந்தல் பகுதி வனக்காப்பாளராக பணியாற்றி வருபவா் ... மேலும் பார்க்க

விஜயகாந்த் படத்துக்கு தேமுதிகவினா் மரியாதை

போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சியில் தேமுதிக முன்னாள் தலைவா் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு திங்கள்கிழமை கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை ஆா்ப்பாட்டம்

ஆரணி: திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், ஊராட்சி ஒன்றிய அ... மேலும் பார்க்க