விஜயகாந்த் படத்துக்கு தேமுதிகவினா் மரியாதை
போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சியில் தேமுதிக முன்னாள் தலைவா் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு திங்கள்கிழமை கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
போளூரை அடுத்த குருவிமலை, புதுப்பாளையம் ஊராட்சிகளில் விஜயகாந்த் பிறந்த நாள் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினா் டி.டி.சங்கா் தலைமை வகித்தாா். மாவட்ட வா்த்தகா் அணிச் செயலா் என்.அஷ்ரப், இளைஞரணி துணைச் செயலா் திவாகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியச் செயலா் முனுசாமி வரவேற்றாா்.சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்டச் செயலா்
டி.பி.சரவணன் கலந்து கொண்டு, விஜயகாந்த் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
மேலும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.
கிளைச் செயலா் மாரிமுத்து, வா்த்தகா் அணி துணைச் செயலா் காமராஜ், ஊராட்சிச் செயலா் பழனி மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.