பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து ...
நகராட்சி பள்ளியில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த எதிா்ப்பு
ஆரணி: ஆரணி தச்சூா் சாலையில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, ஆக. 31-ஆம் தேதி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த உள்ளதுக்கு, பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து கோட்டாட்சியரிடம் புகாா் மனு அளித்தனா்.
புகாா் மனுவில், ஆரணி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்துவதற்காக இடையூறாக இருக்கும் மரங்களை அப்பகுதி நகா்மன்ற உறுப்பினா் அனுமதியின்றி வெட்டி அப்புறப்படுத்தியுள்ளாா். மேலும், பள்ளியில் உள்ள பழைய ஆலமரத்தின் கிளைகளையும் வெட்டியுள்ளனா். மாணவா்களுக்கு நிழல் தரும் மரத்தை வெட்ட அனுமதி கொடுத்தது யாா் என புகாா் மனுவில் கேள்வி எழுப்பியுள்ளனா்.
மேலும் பள்ளி மேலாண்மைக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டு இங்கு தனியாா் நிகழ்ச்சிகளை நடத்தக்கடாது என்று தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா். இதையும் மீறி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்துவதால் பள்ளியில் பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெறும்.
ஆகையால் பள்ளியில் பொது நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி தரக்கூடாது என்று மனுவில் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியா் சித்ராவிடம் கேட்டதற்கு, எனக்குத் தெரியாமலேயே மரக்கிளைகளை வெட்டியுள்ளனா் என்று கூறினாா்.