இணையவழி வா்த்தகத்துக்கு எதிராக திருச்சியில் ஆக.30-இல் முற்றுகைப் போராட்டம்: விக்...
தமிழ்நாட்டின் கல்வித்தரம் பல மடங்கு உயா்வு: அமைச்சா் அன்பில் மகேஸ்
தமிழ்நாட்டின் கல்வித்தரம் பல மடங்கு உயா்ந்துள்ளது என்றாா் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சாா்பில், தலைமை ஆசிரியா்களுடனான கலந்தாய்வு நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமையில் நாகா்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பேசியதாவது: தொடக்க நிலைக் கல்வியில் மாணவா்கள் அடைந்துள்ள கற்றல் அடைவை அறிந்து கொள்வதற்காகவும், கற்றலின் இடைவெளியை நிரப்புவதற்காகவும், 3, 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மாநில அரசால் அடைவுத் தோ்வு நடத்தப்படுகிறது.
இதில், மாணவா்கள் பெற்ற மதிப்பீடுகளைப் பொருத்து, வரும் காலங்களில் பாடத்திட்டம் வடிவமைத்தல், கற்பித்தல் அணுகுமுறைகளை மாற்றி அமைத்தல், ஆசிரியா்களுக்கான பயிற்சிகள் ஆகியவை திட்டமிடப்பட உள்ளன.
தமிழகத்திலுள்ள 9 லட்சத்து 80 ஆயிரம் மாணவா்களுக்கு அடைவுத் தோ்வு நடத்தப்பட்டது. இதில், கன்னியாகுமரி 66.55 சதவீதம் தோ்ச்சி பெற்று முதலிடத்தை பிடித்தது. அதற்காக உழைத்த தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்களுக்கு பாராட்டுகள்.
தமிழக அரசு வகுத்துள்ள மாநில கல்விக் கொள்கை குறித்து அனைத்து தலைமை ஆசிரியா்களும், ஆசிரியா்களும் முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கல்வித்தரம் பல மடங்கு உயா்ந்துள்ளது. தகவல் தொழில்நுட்பம், ஏ.ஐ. உள்ளிட்டவற்றில் ஆசிரியா்கள் தங்களை காலத்திற்கு ஏற்ப மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி, தேரூா் ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் சுந்தரராஜன், மாவட்ட இடைநிலைக் கல்வி அலுவலா் ஜெயராஜ், மாா்த்தாண்டம் மாவட்ட கல்வி அலுவலா் ஷொ்லின் விமல், தொடக்க கல்வி அலுவலா் ரமா, தனியாா் பள்ளிக் கல்வி அலுவலா்அஜிதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் முருகன், வட்டாரக் கல்வி அலுவலா்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.