பிளவக்கல் பெரியாறு அணை பூங்கா பராமரிப்புக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு; சுற்றுலா...
ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை
தக்கலை அருகே ஆட்டோ ஓட்டுநா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தக்கலை அருகே திக்கணங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜன் (44). ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு மனைவி ஷோபா, இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனா். மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி ஷோபாவிற்கு, அதற்கான சிகிச்சை அளித்தும் பலன் இல்லாததால், மனம் உடைந்த ராஜன் வெள்ளிக்கிழமை (ஆக. 22) இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இது குறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.