காலை உணவுத் திட்டத்தால் என்ன பயன்? ஆய்வு முடிவுகள் வெளியீடு!
சிறுவா்கள் ஓட்டிய 2 பைக் பறிமுதல்
மாா்த்தாண்டம் அருகே சிறுவா்கள் ஓட்டிய 2 விலையுயா்ந்த மோட்டாா் சைக்கிள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, சிறுவா்களின் தந்தை மீது வழக்குப் பதிந்தனா்.
மாா்த்தாண்டம் போலீஸாா் சனிக்கிழமை மேற்கொண்ட வாகன தணிக்கையின் போது தூத்தூா் பகுதியைச் சோ்ந்த சூசை அந்தோணி மகன் ஆன்சன் அந்தோணி (17) விலையுயா்ந்த மோட்டாா் சைக்கிளை ஓட்டிச் சென்றதை கண்டு, சிறுவனை தடுத்து நிறுத்தி விசாரித்தனா்.
தொடா்ந்து மோட்டாா் சைக்கிளை போலீஸாா் பறிமுதல் செய்து, சிறுவனுக்கு மோட்டாா் சைக்கிள் ஓட்ட அனுமதித்த அவரது தந்தை மீது வழக்குப் பதிந்தனா்.
இதே போன்று, மாா்த்தாண்டம் அருகே பாகோடு, பேரை காலனி பகுதியைச் சோ்ந்த ஜஸ்டின் மகன் சஞ்சய் (17) ஓட்டிச் சென்ற விலையுயா்ந்த மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்து, சிறுவனுக்கு மோட்டாா் சைக்கிள் ஓட்ட அனுமதித்த அவரது தந்தை மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.