மீனாட்சி சுந்தரம் தொடர் நிறைவு! இறுதிநாள் படப்பிடிப்பில் அழுத நடிகைகள்!
நாகாலாந்தின் 22வது ஆளுநராகப் பதவியேற்றார் அஜய் குமார்!
மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா நாகாலாந்தின் 22வது ஆளுநராகப் பதவியேற்றுக் கொண்டார்.
ஆளுநர் இல. கணேசனின் மறைவைத் தொடர்ந்து, அஜய் குமார் பல்லாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு குவாஹாட்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அசுதோஷ் குமார் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
பதவியேற்பு விழாவில் நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ, துணை முதல்வர்கள் டி.ஆர். ஜெலியாங் மற்றும் ஓய் பாட்டன், மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் பிற பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.