செய்திகள் :

நடிகை, எழுத்தாளருக்கு பாலியல் தொல்லை! கேரள காங்கிரஸ் எம்எல்ஏ இடைநீக்கம்!

post image

பாலியல் புகார்களைத் தொடர்ந்து கேரள காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ராகுல் மம்கூத்ததில் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பெரிய அரசியல் கட்சியைச் சேர்ந்த இளைஞர் அமைப்பின் மாநிலத் தலைவர் ஒருவர் தனக்கு தொடர்ந்து ஆபாச அனுப்புவதாகவும் ஹோட்டலுக்கு அழைத்ததாகவும் மலையாள நடிகை ரினி ஆன் ஜார்ஜ் கடந்த வாரம் குற்றச்சாட்டை எழுப்பினார்.

ரினி ஆன் தனது குற்றச்சாட்டில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும், பாலக்காடு எம்எல்ஏவும் மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவருமான ராகுல் மம்கூத்ததில் அலுவலகத்துக்கு வெளியே பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, எழுத்தாளர் ஹனி பாஸ்கரனும் ராகுலுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும், திருநங்கை அவந்திகா, காங்கிரஸ் பெண் தொண்டர்கள் உள்பட பல பெண்கள் ராகுலுக்கு எதிராக குற்றச்சாட்டை எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், ராகுல் மம்கூத்ததிலை சட்டப்பேரவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், அவர் காங்கிரஸ் இளைஞரணி தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார்.

தற்போது அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்து காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், ராகுல் மீது அதிகாரப்பூர்வமாக புகார்கள் எதுவும் காவல்துறையில் பதிவு செய்யப்படாததால், அவர் சுயேட்சை எம்எல்ஏவாக பதவி வகிக்கலாம் என்று காங்கிரஸ் மாநில தலைவர் சன்னி ஜோசப் தெரிவித்துள்ளார்.

Kerala Congress MLA Rahul Mamkootathil has been suspended from the party following sexual harassment allegations.

இதையும் படிக்க : இந்திரா காந்தி போல அல்ல, பதவிப் பறிப்பு மசோதாவில் பிரதமர் தன்னையும் இணைத்துள்ளார்: அமித் ஷா

மோடியின் பட்டப்படிப்பு விவகாரம்: உத்தரவை ரத்து செய்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை வெளியிட வேண்டும் என்று தில்லி பல்கலைக்கழகத்துக்கு, மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை தில்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.தில்லி பல்கலைக்கழகத... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருடன் ஃபிஜி பிரதமர் சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ஃபிஜி நாட்டின் பிரதமர் சித்திவேணி லிகாமமதா ரபூகா இன்று(ஆக. 25) சந்தித்து பேசினார். தில்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் (ராஷ்திரபதி பவன்) இந்தச் சந்திப்பு நடைப... மேலும் பார்க்க

உத்தரகண்ட்: தொடரும் நிலச்சரிவுகளால் தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்!

உத்தரகண்ட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. யமுனோத்ரி, கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவால் போக்குவரத்து தடைபட்டு உள்ளது. நலூனா பகுதியருகே ஏற்பட... மேலும் பார்க்க

தசரா விழாவுக்கு புக்கர் பரிசு வென்ற முஸ்லிம் எழுத்தாளருக்கு அழைப்பு: பாஜக கண்டனம்!

உலகப் புகழ் பெற்ற மைசூரு சாமுண்டீஸ்வரி திருக்கோவிலில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் தசரா விழாவில் புக்கர் பரிசு வென்ற முஸ்லிம் எழுத்தாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு கர்நாடக பாஜக தரப்பிலிரு... மேலும் பார்க்க

காஷ்மீர்: எல்லைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் - தீவிர தேடுதல் பணி!

ஜம்மு - காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் எதிரொலியாக அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.ஜம்மு - காஷ்மீரில் உரி பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமா... மேலும் பார்க்க

பஞ்சாபில் இலவச ரேஷனை நிறுத்த மத்திய அரசு சதி: பகவந்த் மான்

பாஜக தலைமையிலான மத்திய அரசு மாநிலத்தில் 55 லட்ச மக்களுக்கு இலவச ரேஷனை நிறுத்தச் சதி செய்வதாக பஞ்சாப் முதல்வர் பகந்த் மான் குற்றம் சாட்டினார். பஞ்சாப் மக்களுக்கு எழுதிய எழுத்துப்பூர்வ செய்தியில், மாநில... மேலும் பார்க்க